முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் கும்மின்ஸ் இடம் பெறுவாரா?

சனிக்கிழமை, 3 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, நவ. 3 - ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இள ம் வேகப் பந்துவீச்சாளரான கும்மின்ஸ் இடம் பெறுவது கேள்விக் குறியாகி உள்ளது. சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடை பெற்றது. இதில் கோப்பையைக் கைப் பற்ற 10 அணிகள் களம் இறங்கின. 

இறுதியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிட்னி சிக்சர்ஸ் அணி இறுதிச் சுற்றில் லயன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. 

இந்தப் போட்டியில் லீக் முதல் இறுதிச் சுற்று வரை சிட்னி சிக்சர்ஸ் அணி தோ ல்வி அடையவில்லை. அந்த அணி துவ க்கம் முதல் இறுதிவரை சிறப்பாக ஆடியது. 

சிட்னி அணியில் இளம் வேகப் பந்து வீச்சாளரான பேட் கும்மின்ஸ் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த அணியி ன் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 

தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் கிரீ ம் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலி யாவில் சுற்றுப் பயணம் செய்து கேப்ட ன் மைக்கேல் கிளார்க் தலைமையிலா   ன அணிக்கு எதிராக விளையாட இரு க்கிறது. 

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரி க்கா அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதன் முத ல் போட்டி அடுத்த வாரம் துவங்குகிறது. 

19 வயதே ஆன கும்மின்ஸ் சாம்பியன் ஸ் லீக் போட்டியின் போது காயம் அடைந்தார். அவர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். 

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கும்மின்ஸ் நாடு திரும்பியதும் அவரது முது கில் வீக்கம் ஏற்பட்டது. அவர் தற்போ து அதற்காக சிகிட்சை எடுத்து வருகிறார். 

அவரிடம் இந்தக் காயம் குறித்து கேட்ட போது, இதற்காக நான் சிகிட்சை எடுத்து வருகிறேன். இது தொடர்பாக பிசியோவையும் சந்தித்து ஆலோசித்து வருகிறேன். விரைவில் இது குணமாகு ம் என்றார் அவர். 

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் கும் மின்ஸ் இடம் பெறுவாரா என்று தேர் வுக் குழு உறுப்பினர் ஒருவரிடம் கேட்ட  போது, அவர் முதல் டெஸ்டிற்கு தேர்வாகவில்லை. ஆனால் 3-வது டெ ஸ்டில் அவர் இடம் பெறலாம் என்றார் அவர். 

கடந்த சீசனில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் ஆஸ்திரேலியாவில் சுற் றுப் பயணம் செய்து விளையாடிய போது கும்மின்ஸ் இந்தத் தொடரில் காயம் காரணமாக இடம் பெறவில் லை. அப்போது அவருக்கு குதிகாலில் காயம் ஏற்பட்டு இருந்தது. 

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஜோ கன்ஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியி ன் மூலம் கும்மின்ஸ் அறிமுகம் ஆனா ர். இதில் அவர் சிறப்பாக ஆடியதைத் தொடர்ந்து டெஸ்ட் அணியிலும் அவ ருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்