முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. 4 - இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பெரிஸிடம் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார். இந்திய பெருங்கடல் நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் 19 வது கூட்டம் அரியானா மாநிலம் குர்கானில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இடையே இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், இலங்கை வெளியுறவு அமைச்சரும் சந்தித்து பேசினர். அப்போது, இந்திய, இலங்கை நல்லுறவு குறித்தும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் மறுவாழ்வு திட்டங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர். 

மேலும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்பட்ட 5 தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சல்மான் குர்ஷித் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த பெரிஸ் இந்திய, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமாக மீன் பிடி தொழில் விளங்குகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளின் அதிகாரிகள் நிலையில் பேசி தீர்வு காண முயற்சிப்பதை விட மீனவர்கள் நிலையில் பேசி சுமூக தீர்வை எட்ட இரு தரப்பு மீனவர்களும் முன் வர வேண்டும். இது தொடர்பாக விவாதிக்க விரைவில் இரு நாட்டு மீனவர்களின் கூட்டு குழு கூட்டத்துக்கு இலங்கை அரசு ஏற்பாடு செய்யும் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குர்ஷித், இலங்கை அமைச்சருடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. விரைவில் தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்யும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்