முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்யானந்தா மீது நில அபகரிப்பு புகார்..!

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சேலம், நவ. 4 - பிடுதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தா மீது சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி நில பறிப்பு புகாரை போலீசில் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் சீரகாப்பாடி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸிடம் அவர் அளித்த மனுவில், 

2008 ம் ஆண்டில் சென்னகிருஷ்ணன், சக்தி செல்வம் ஆகியோர் மூலம் நித்யானந்தாவிடம் அறிமுகமானேன். அவரது செயலர் சதானந்தா உள்ளிட்டோர் சீரகாப்பாடி பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் அமைக்க விரும்புவதாகவும், எனவே கடத்தூர் முக்கோணம் பாளையம் பகுதியில் உள்ள எனது நிலத்தை தானமாக கொடுக்குமாறு கேட்டனர். மேலும் நித்யானந்தரும் இது குறித்து என்னிடம் தொலைபேசியில் பேசினார். இதையடுத்து 50 செண்ட் நிலத்தை தானமாக கொடுக்க ஒப்புக் கொண்டேன். 

2006 ம் ஆண்டு பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்ற என்னிடமும், எனது மனைவி, சகோதரி ஆகியோரிடமும் அவர்கள் ஆங்கிலத்தில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். ஆனால் நிலத்துக்கான பணம் குறித்து அவர்கள் பேசவில்லை. 2010 ம் ஆண்டு அக்டோபர் 12 ம் தேதி நித்யானந்தருக்கு கொடுத்த நிலத்தின் அருகில் இருந்த எனது நிலத்தை விற்பனை செய்ய முயன்ற போது நித்யானந்தரின் ஆதரவாளர்கள் தடுத்து நிலம் முழுவதும் தங்களுடையது என கூறி பத்திரத்தை காட்டினர். 

அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். மேலும் நித்யானந்தர் உட்பட அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டியதால் போலீசில் புகார் அளிக்கவில்லை. 

இந்த நிலையில் கடந்த மாதம் 23 ம் தேதி என்னை தொடர்பு கொண்ட சிலர் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் எனவும், நிலத்தையோ, அதற்கான பணத்தையோ கொடுத்து விடுவதாகவும், இதை நித்யானந்தர் சொல்லச் சொன்னதாகவும் கூறினர். ஆனால் உறுதி அளித்தபடி அவர்கள் எதையும் செய்யவில்லை. எனது நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago