முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எப். ஓய்வூதியத்தை உயர்த்த அரசு பரிசீலனை

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், நவ. 4 - ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியத்தை ரூ. ஆயிரமாக உயர்த்தி வழங்க மத்திய தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அத்துறையின் இணையமைச்சர் கொடிக்குன்னில் சுரேஷ் தெரிவித்தார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது, 

ஈ.பி.எப். ஓய்வூதியம் மிக குறைவாக ரூ. 50 முதல் ரூ. 3 ஆயிரமாக வழங்கப்பட்டு வருவதாகவும், அதுதான் குறைந்தபட்சம் ரூ. ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் ஓய்வூதிய சங்கங்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஈ.பி.எப். ஓய்வூதிய நிதியை ரூ. ஆயிரமாக உயர்த்தி வழங்கலாம் என்று நிதியமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வந்தவுடன் அரசு முடிவெடுக்கும் என்றார். 

ஆயிரத்து 500 தொழிலாளர் பயிற்சி நிறுவனங்களை அமைக்கும் நடவடிக்கையை தொழிலாளர் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 2022 ம் ஆண்டுக்குள் சுமார் 50 லட்சம் இளைஞர்களுக்கு தனித்திறன் பயிற்சி வழங்கப்படும். அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கும் சுகாதார காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்