முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்து ஆட்சியை மாநில கட்சிகளே தீர்மானிக்கும்: வைகோ

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, நவ. 4 - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தா சென்று சந்தித்துப் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அடுத்த மத்திய ஆட்சியை மாநிலக் கட்சிகளே தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார். கொல்கத்தாவுக்கு நேற்று முன்தினம் சென்ற ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அங்கு முதல்வர் மம்தாவை சந்தித்துப் பேசினார்.

மமதாவுடனான சந்திப்பின்போது வைகோ கூறுகையில், மத்திய அரசில் குவிக்கப்பட்டு உள்ள அதிகாரங்கள் பலவற்றை, மாநிலங்களுக்கு வழங்கவும், மத்திய அரசினுடைய எதேச்சதிரகாரப் போக்கை மாற்றவும், உறுதிகொண்டு போராடுவதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

மம்தாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், மத்திய காங்கிரஸ் அரசின் ஊழல் குறித்தும், ஈ்ழத் தமிழர்கள் படுகொலைக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு செய்த துரோகத்தை பற்றியும் விளக்கினார்.

மேலும் அவர் கூறுகையில், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளே இந்திய அரசைத் தீர்மானிக்கும் என்றார் வைகோ. வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மேற்கு வங்க அமைச்சர் ஆருக் பிஸ்வாஸும் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago