முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மணிநேர தாமதத்திற்கு ஸ்பைஸ்ஜெட்டுக்கு ரூ. 22,000 நஷ்டஈ்டு

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 5 - காத்மண்டுவிலிருந்து டெல்லிக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை 4 மணி நேரம் தாமதமாக இயக்கியதற்காக பயணி ஒருவருக்கு ரூ. 22 ஆயிரம் நஷ்ட ஈடு கொடுக்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. டெல்லி - காத்மாண்டு வந்து செல்ல ஜகிஸ்கான் அகர்வால் தமது குடும்பத்தினருடன் கடந்த 2010 ம் ஆண்டு செப்டம்பர் 9 ம் தேதி ஸ்பைஸ்ஜெட்டில் டிக்கெட் பதிவு செய்திருந்தார். அகர்வால், பார்வை குறைபாடு உடையவர். காத்மண்டுவில் காலை 10.45 க்கு புறப்பட வேண்டிய விமானம் மாலை 3.24க்குத் தான் புறப்பட்டது. விமானம் தாமதமாக கிளம்பியதற்கு காரணம், ஏர் டிராபிக் என்று ஸ்பைஜெட் என்று சொல்வதில் உண்மை இல்லை என்பது அகர்வாலின் புகார். இதனை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு ரூ. 22 ஆயிரத்தை நஷ்ட ஈடாக அகர்வாலுக்கு கொடுக்க உத்தரவிட்டது. ஸ்பைஸ்ஜெட் தரப்பில் விமானம் தாமதமாக புறப்பட்டதற்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை என்பதால் நுகர்வோர் தீர்ப்பாயம் இத்தீர்ப்பை அளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்