முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியராணுவ தலைமைதளபதி அடுத்தமாதம் இலங்கை பயணம்

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 5 - இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் விக்ரம்சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு பயணமாகிறார். இரு நாடுகள் இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இவர் இலங்கை போகிறாராம். இலங்கையுடன் எந்தவித ராணுவ ஒத்துழைப்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் எல்லாம் கரடியாய் கத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ராணுவ தளபதி அங்கு சென்று இரு நாடுகளிடேயே ராணுவ உறவை வலுப்படுத்தப் போகிறாராம். அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் ஜெனரல் விக்ரம் சிங் இலங்கைக்கு செல்வார் என்று தெரிகிறது. இருந்தாலும் தேதி இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகள் இடையேயான ராணுவ பயிற்சி மற்றும் கூட்டுப் பயிற்சி, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆய்வு செய்வது இவரது பயணத்தின் நோக்கமாம். விடுதலைப் புலிகளை எப்படி ஒடுக்கினீர்கள்? அதில் உங்கள் அனுபவம் என்ன? என்றெல்லாம் ராணுவ தலைமை தளபதி இலங்கையுடன் பேசப் போகிறாராம். மேலும் இந்திய, இலங்கை ராணுவத்தினர் அடுத்த ஆண்டு கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி ஏற்கனவே கடந்த மாதம் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சேவுடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும், பாதுகாப்பு செயலாளர் சசிகாந்த் ஷர்மாவும் ஆலோசனை நடத்தி விட்டார்களாம். இலங்கையுடன் எந்தவிதமான ராணுவ உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு குரல் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பல கடிதங்களை எழுதி விட்டார். தமிழ்நாட்டில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தது. அவை எல்லாம் முதல்வரின் கடும் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். சென்னை தாம்பரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9 இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளும் கடந்த ஜூலை மாதம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இவர்களை இந்தியாவுக்குள்ளேயே இருக்க விடக் கூடாது. நாடு கடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வரும் இந்த வேளையில்தான் இந்திய ராணுவ தலைமை தளபதி இலங்கைக்கு போகிறார். போவது மட்டுமல்லாமல் இரு நாடுகளிடையே ராணுவ உறவை வலுப்படுத்தப் போகிறாராம். இது எப்படி இருக்கு!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago