முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

விசாகப்பட்டினம்,நவ.5 விசாகப்பட்டினம் நகரில் கடந்த 36 மணி நேரமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தினால் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து போத்துவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரத்தினசால், ஜன்மபூமி, சிம்மத்திரி, விசாகப்பட்டினம், ராஜமுந்கிரி பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துனி அருகே ரயில் தண்டவாளத்துக்கு மேல் வெள்ளம் செல்வதால் விசாகப்பட்டினம் நோக்கி வரும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோகுலபாடு அருகே தேசிய நெடுஞ்சாலை-5 கடுமையாக சேதமடைந்துள்ளது. அன்னாவரம் அருகே 25 கி,மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாண்டவா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விஜயவாடாவிலிருந்து வரும் ரயில்கள் அன்னாவரம் அருகே நிறுத்தப்பட்டுள்ளன. குண்டூரிலிருந்து வந்த பஸ் தர்மாவரம் கிராமம் அருகே 26 பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பஸ் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.போலீஸாரும், உள்ளூர் மக்களும் பயணிகளை காப்பாற்றினர் . போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.24 மணி நேரமும் தீயணைப்புப் படையினரும், அரசு அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கிய 20 பேரை கடற்படையினர் காப்பாற்றினர். தொடர்மழை, வெள்ளம் காரணமாக தொலைத் தொடர்பு, தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்