முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டையில் உள்ள கலைக் கல்லுாரியில் தன்னாட்சி மறுஆய்வுக்குழு ஆய்வு

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

அருப்புக்கோட்டை, நவ. - 5 - அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரிக்கு பல்கலைக்கழக மானிய குழுவின் தன்னாட்சி மறு ஆய்வுக்குழு இரண்டு நாட்கள் வருகை புரிந்து ஆய்வு செய்தனர். தேவாங்கர் கலைக் கல்லூரி தேசிய தர நிர்ணய மறு மதிப்பீட்டு குழுவினரால் ாஏா கிரேடு தரத்துடன் செயல்பட்டு வருகிறது. அதன் முக்கிய அம்சமான நவீன காலத்தின் தேவைக்கேற்ப வேலை வாய்ப்பிற்கு உகந்த பாட திட்டங்களை உருவாக்குவதற்கும் பருவத் தேர்வுகளை நடத்தி உடனுக்குடன் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கும் வசதியாக இக்கல்லூரிக்கு 2007ம் ஆண்டு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. தன்னாட்சி அந்தஸ்தை 5 ஆண்டுகள் சிறப்பாக நிறைவு செய்ததன் பொருட்டு இவ்வந்தஸ்தை மேலும் நீடித்து ஊக்குவிக்கும் பொருட்டு பல்கலைக்கழக மானிய குழுவினால் தெரிவு செய்யப்பட்ட நிபுணர் குழுவினர் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர். அமிர்தசரஸ், குருநாதன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியர் பேடி இக்குழுவின் தலைவராக இருந்தார். கொச்சின் மகரகாஸ் கல்லூரியின் முதல்வர் வல்சலகுமாரி ஹைதராபாத் நி'ாம் கல்லூரியின் முதல்வர் நாயுடு அசோக், பெங்க;ர், மவுண்ட கேரமல் கல்லூரியின் முதல்வர் ஜொனைட்டா ஆகியோர் இவ் ஆய்வுக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். மேலும் தமிழ்நாடு மாநில அரசின் பிரதிநிதியாக மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் விஜயராணி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பிரதிநிதியாக முதுகலை வணிக மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் சந்திரன், பல்கலைக் கழக மானியக் குழுவின் பிரதிநிதியாக தெற்கு-மேற்கு மண்டல உதவிச் செயலாளர் கோபு குமார் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். ஏழு பேர் இந்நிபுணர் குழுவினர் கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம் தேர்வு முறைகள் முதலியவற்றை ஆய்வு செய்தனர் என கல்லூரிச் செயலர் ராஜ்குமார் தெரிவித்தார். கல்லுாரியின் முதல்வர் ரவிக்குமர், கல்லூரி நிர்வாகக் குழுவினர், தேர்வுக் கட்டுப்பட்டாளர் பேராசிரியர் கணேசன், ஐ.க்யு.ைஏ.சி. ஒருங்கிணைப்பாளர் பகவதி சுந்தரம், தன்னாட்சி குழுவின் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்