முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து- தென்கொரியா ஆகியவற்வை விடமேம்பட்ட மாநிலமாக தமிழகம் அமையும்

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.- 6 - தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் இன்றைய தினம் பொன் எழுத்தில் பொறித்த நாளாகும். ஒரே நாளில் இதற்கு முன்னர் தமிழக அரசு 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஒருபோதும் செய்ததில்லை. ஹூண்டாய் மோட்டார்ஸ், நோக்கியா, செயின்ட் கோபைன், மற்றும் சன்மினா எஸ்.இ.ஐ. இது தவிர மிகப்பெரிய நிறுவனங்களான சுந்தரம் கிளேடன் லிட், டியூப் இன்ஸ்வெஸ்ட்மெண்ட் ஆப் இந்தியா, ஹர்ஷா குரூப் நிறுவனங்கள், ஹம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் லிட்., ஆகிய நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூபாய் 20, 925 கோடிகளாகும். இதனால் 36,855 பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1 லட்சம் பேர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும். 2012, மே 14-ந் தேதி அன்று தமிழக அரசு டைம்லர் இந்தியா கமர்ஷியல் வெகிக்கில்ஸ் பிரைவேட் லிட்., இந்தியா யமஹா மோட்டார் லிட்., அசோக் லேலேண்ட்- நிசான்  மோட்டார் கம்பெனி லிட்., எய்ச்சர் மோட்டார்ஸ் லிட்., மற்றும் பிலிப்ஸ் கார்பன் லிட்., ஆகிய 5 திட்டங்களுக்கு ரூபாய் 5,700 கோடி முதலீட்டில் 9,500 பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  விடுதலைக்கு பிந்தைய சகாப்தத்தில் தமிழ்நாடு என் தலைமையின் கீழ் 1992 ஆம் ஆண்டு தொழிற்கொள்கையை வெளியிட்டு மாநிலத்தின் உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. போர்டு மற்றும் ஹூண்டாய் போன்ற மாபெரும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்த்து ஆட்டோமொபைல் தொழிலில் புரட்சியை ஏற்படுத்த அந்த கொள்கை காரணமாக அமைந்துள்ளது. 1991 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளுக்கிடையில் என்னுடைய முந்தைய அரசு மேற்கொண்ட ஆரம்ப நடவடிக்கைகளினால் இன்றைய தினம் சென்னை உலக ஆட்டோ மையமாக திகழ்கிறது. துரதிருஷ்டவசமாக 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் வேறு அரசு மாநிலத்தை ஆண்டதினால் இந்த ஒப்பந்தத்திற்கு பொருந்தவில்லை. 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கிடையே என்னுடைய அரசு தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்கு சிறப்பான தொழில் துறை மேம்பாட்டையும், தொழிலுக்கு உகந்த சூழ்நிலையையும் ஏற்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்தது. என்னுடைய அரசு பல சிறப்பான அம்சங்களை  கொண்ட 2003-ல் தொலை தூர பார்வையுடன் தொழில் கொள்கையை உருவாக்கியது.  நோக்கியா, போக்ஸ் கான், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் மற்றும் பல நிறுவனங்களை ஈர்த்து தமிழ்நாட்டில் மின்னணு புரட்சி ஏற்பட அந்த கொள்கை வழிவகுத்தது. நோக்கியாவின் திட்டம் உலகிலேயே கையடக்க தொலைபேசி தயாரிப்பில் முதன்மையாக உள்ளது. இன்றைய தினம் இந்தியா ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு வன்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் தலைமையாக சென்னை உள்ளது. 

இந்த வெற்றி 1992 மற்றும் 2003-ல் என்னுடைய அரசு அறிமுகப்படுத்திய என்னுடைய தலைமையின் கீழ் வெளியிட்ட தொழில் கொள்கைக்கு கிடைத்ததாகும். தமிழக அரசின் 2012-ன் தொழிற்கொள்கை விரைவில் வெளிவர உள்ளது. மாநிலத்தின் போட்டியிடும் வலிமையை நாம் கட்டமைத்ததின் காரணமாக 2001- 2006 காலகட்டத்தில் தமிழகம் முதலீட்டுக்கு சாதகமான விரும்பும் மையமாக மாறியது. வசதியான மின்சக்தி சூழ்நிலை, சிறந்த நிதி பராமரிப்பு ஏற்பட்ட திறமையான கூட்டுச் சூழ்நிலை ஆகியவற்றால் தமிழகம் உச்சநிலையில் உள்ள வெற்றியாளராக திகழ்கிறது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணிப்பின்படி 2001 செப்டம்பரிலிருந்து 2004 மார்ச் வரையில் தமிழகம் உற்பத்தித்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் தன்னிரகற்ற மாநிலமாக விளங்கியது.   பைனான்ஸ் குரூப்பின் எப்.டி.ஐ.களஞ்சியம் நடத்திய 2005- 2006 ஆசிய பிரதேச எதிர்காலம் என்று தலைப்பிட்ட கணக்கெடுப்பின் தமிழ்நாடு வெற்றி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.  மிகச்சிறந்த குறிப்பிடத்தக்க சாதனை பெற்ற மாநிலம் என்ற பெயரை பெறும் வகையில் மற்ற மாநில அரசுகள், பிரதேச அரசுகள், ஆசிய நாடுகள் ஆகியவற்றை தமிழ்நாடு இந்த வகையில் புறம் தள்ளியது. 2011, மே மாதம் என்னுடைய அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்றபோது, தொடர் மின் பற்றாக்குறையினால் நெருக்கடியான நிதிநிலையுடன் கூடிய சூழ்நிலையை முந்தைய அரசு விட்டுச் சென்றதை நான் சந்திக்க நேர்ந்தது. இத்தகைய சவால்கள் நம்முடைய போட்டியிடும் வலிமையை குறைத்து பல நிறுவனங்கள் அச்சத்துடன் விலக வைத்தது. வறுமையை அகற்ற லாபகரமான வேலைவாய்ப்பு சூழ்நிலைகளை அரிய தொழில் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டிய மறுசீரமைப்பு போராட்டத்திற்கு நான் உறுதி கொண்டேன். தன்னிரகற்ற மாநிலம் என்ற சூழ்நிலையை மீண்டும் பெற எனக்கு நானே தயார்படுத்திக் கொண்டேன். 

முதலீட்டாளர்கள் விருப்பு வெறுப்புகளுக்கிடையில் ஒரு மாறுபட்ட நிலையை உலகம் பதற்றத்துடன் எதிர்நோக்கியது. உடனடி மற்றும் நடுத்தரத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் ஈடுபட இந்த சூழ்நிலை ஊக்கப்படுத்தியது. நீண்ட கால திட்டங்களுக்கு மந்தம் ஏற்பட்டது. இதில் ஊக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த தமிழக அரசு முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டியதானது. வறுமையற்ற சிறந்த வளமும், முன்னேற்றமும் கொண்ட மாநிலமாக தமிழகம் மாறவும், நவீன சமுதாயத்தின் அடிப்படை சேவைகளை மக்கள் அனுபவிக்கும் வகையிலும், மனதுக்கு இதமான ஈடுபாட்டுடன் வாழக்கூடிய சூழ்நிலையில் உலகின் மற்ற பகுதிகளுக்கு நிகரான 2023 தொலைநோக்கு திட்டத்தை நான் வெளியிட்டேன். 2023 தொலைநோக்கு திட்டத்தில் எதிர்பார்க்கும் தேசிய ஒட்டுமொத்த வளர்ச்சியான 11 சதவீதத்தை விட ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியை நான் திட்டமிட்டுள்ளேன். அந்த காலகட்டத்தில், அடுத்த 11 ஆண்டுகளில் 15 சதவீத மக்கள் தொகை வளர்ச்சிக்கிடையே  தனிநபர் வருமானம் 6 மடங்கு அதிகரிக்கும். அதாவது 2010-11-ல் 1628 அமெரிக்க டாலராக 73278 ரூபாயாகவும், 2023-ல் 10,000 அமெரிக்க டாலராகவும், 4,50,000 ரூபாயாக இருக்கும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சிறந்த ஆதாரங்களை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு வறுமையற்ற மாநிலமாக மாறும். 2023 தொலைநோக்கு திட்டம் 10 உத்திகளை கொண்ட வளர்ச்சி வியூகத்தை உருவாக்கும்.  தகுதியான வணிகத்தை நடத்துவதற்கு சரியான சூழ்நிலையை அளிப்பதை சார்ந்தே முதலீட்டை ஈர்ப்பது அமையும். மின்சக்தி, தண்ணீர், இணைப்பு தொடர்பு, துறைமுக வசதிகள் ஆகிய அவசிய கட்டமைப்புகள் கிடைக்கும்போதுதான் முதலீடுகளை ஈர்க்க முடியும்.  தமிழ்நாடு 11 சதவீத பொருளாதார வளர்ச்சியையும், 14 சதவீத உற்பத்தித் துறை வளர்ச்சியையும் எதிர்நோக்கியுள்ளது. அற்பபுத்தி உள்ளவர்கள் என்னுடைய திட்டங்களை கண்மூடித்தனமாக துரதிருஷ்டவசமாக குறை சொல்கிறார்கள். ஆனால் பெரிய மனம் படைத்தவர்கள் அதற்கு மேலும் பாராட்டுகிறார்கள். உலகில் 3 வகையான மக்கள் உள்ளனர். முடியும் என்பவர்கள் , முடியாது என்பவர்கள், முடியவே முடியாது என்பவர்கள். முதலாமானவர்கள் ஒவ்வொன்றையும் அடைகிறார்கள். முடியாது என்பவர்கள் எதிர்க்கிறார்கள். முடியவே முடியாது என்பவர்கள் தோற்றுப் போகிறார்கள். இன்றைய நமது சந்தேகங்கள் நாளை நனவாக்கும் குறிக்கோளாக மாறும். தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம் ஆகியவற்றின் மத்திய அரசு வெளியீடு புள்ளி விவரங்கள் 2012-ல் வெளியிட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு 40,1,537 கோடி ரூபாய் முதலீட்டையும், 2011-ல் 3,33,001 கோடி ரூபாய் உற்பத்தித்துறை முதலீட்டையும் ஈர்த்துள்ளது. 2011 முதல் 2012 வரையில் 34 மாதங்களில் தமிழ்நாடு 68,527 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளது.  என்னுடைய அரசு தமிழகத்தை உயர் வளர்ச்சி வட்டத்தில் இடம் பெற செய்யவும், நடுத்தர வருமான நாடுகளான வளர்ச்சியால் தாய்லாந்து, தென்கொரியா ஆகியவற்றை விட மேம்பட்ட மாநிலமாகவும் மாற்ற குறிக்கோள் கொண்டுள்ளது.   உற்பத்தி துறையில் 1,00,000 கோடி முதலீட்டை ஈர்த்து இதுவரை இல்லாத சாதனையை பதிவு செய்ய எண்ணி உள்ளது. எல்லா வகையான மேம்பாடுகளிலும் தமிழ்நாட்டை நிகரற்ற மாநிலமாக்க நான் உறுதி கொண்டுள்ளேன். என்னுடைய அரசு எல்லா மட்டங்களில் தரமான நிர்வாகத்தை வழங்கி வளர்ச்சிக்கும், போட்டிக்குமான தடைகளை அகற்ற உறுதி கொண்டுள்ளது. தற்போது தமிழ்நாடு கோருகின்ற முதலீடு மற்றும் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு புதிய வழிகளை காண தமிழ்நாடு மேற்கொள்ளும் முயற்சியில் நீங்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிட்., இந்தோ ராமா குரூப் நிறுவனங்கள், ஏடிடி தொழிற்பூங்கா, பிஜிஆர் எனர்ஜி குரூப் நிறுவனங்கள், ஹர்ஷா குரூப் ஆப் கம்பெனிகள், ஜெயின்ட் கோபைன் கிளாஸ் இந்தியா லிட்., டான்பாஸ் இன்டஸ்ட்ரீஸ் பி.லிட்., நோக்கியா பி.லிட்., சன்மினா எஸ்இஐ இந்தியா பி.லிட்., டியூப் இன்வெஸ்ட்மென்ட் இந்தியா, ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பி.லிட்.. மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களை இந்த தருணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவுக்கு அழைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த கூட்டு ஒப்பந்தங்களில் நம்முடைய பங்குதாரர்கள் அனைவரும் கொள்கை ரீதியாக வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.              

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்