முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவேகானந்தரும், தாவூக் இப்ராகிமும் அறிவாற்றலில் சமமானவர்களே

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

நாகபுரி, நவ.- 6 - அரசியல்வாதிகளுக்கும், சர்ச்சைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிரச்சினையில்லாவிட்டால் கூட பிரச்சினையை உருவாக்குவது அரசியல்வாதிகளின் இயல்பு ஆகும். இந்தியாவில் கழிவறைகளின் எண்ணிக்கையை விட கோயில்களின் எண்ணிக்கை அதிகம் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை மந்திரி ஜெயராம் ரமேஷ் கூறியது கடும் சர்ச்சையை எழுப்பியது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை மந்கிரி சசிதரூரின் மனைவி சுனந்தாவை ரூ.50 கோடி மதிப்புள்ள கேர்ல் பிரண்ட் என்று குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடி விமர்சித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாகபுரியில் நடைபெற்ற ஒரு விழாவில் பாஜக தேசியத் தலைவர் நிதின்கட்கரி கலந்துகொண்டு ஆற்றிய உரை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிதின்கட்கரி தனது உரையில் குறிப்பிட்டதாவது: உளவியலில் ஒருவரது அறிவாற்றலை ஐகியூ என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஐகியூ ஆளுக்குஆள் மாறுபடும்.சிலரின் ஐகியூ ஒரே தரத்தில் இருக்கும். சுவாமி விவேகாநந்தரின் அறிவாற்றலும், தாவூத் இப்ராகிம்மின் அறிவாற்றலும் ஏறத்தாள சமம் தான் என்று நான் கருதுகிறேன்.சுவாமி விவேகானந்தர் ஆன்மிகத் தலைவராவார். தேசத்தை எழுச்சி பெறவைக்க அவர் தனது அறிவாற்றலை பயன்படுத்தினார்.இது ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகும். தாதா தாவூத் இப்ராகிம் தனது அறிவாற்றலை நாசகார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதால் மும்பை ரத்தக் களறியானது. இது எதிர்மறையான செயல்பாடு ஆகும். பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு திருப்தி இல்லை. அவர்களது செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கே அதிருப்தி உள்ளது. அரசியலில் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.ஜாதியின் அடிப்படையிலோ, மதத்தின்அடிப்படையிலோ மொழியின் அடிப்படையிலோ அல்லது பாலினத்தின் அடிப்படையிலோ மக்களை வேறுபடுத்தி பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.
மக்களை அவர்களது ஐகியூவின் அடிப்படையிலே மதிப்பிட வேண்டும்.21-ம் நூற்றாண்டு அறிவு உலகத்தின் பொற்காலமாக திகழும் என்பது சுவாமி விவேகானந்கரின் தீர்க்க தரிசனம் ஆகும்.இது நிச்சயமாக நிரூபணம் ஆகும். இந்நூற்றாண்டில் இந்தியா மகத்தான வளர்ச்சிபெறும்.இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று நிதின் கட்கரி பேசினார்.ஜனவரி மாதம் 12-ம் தேதி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா
கொண்டாட்டம் உலகம் முழுவதும் நடைபெற உள்ளது. இவ்வேளையில் நிதின்கட்கரி தெரிவித்துள்ள கருத்து விவேகானந் தரை இழிவு படுத்தி விட்டது என்று பல்வேறு தரப்பினரும் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago