முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு வழக்கு:பிப். 19 ல் இறுதி விசாரணை சுப்ரீம்கோர்ட் அறிவிப்பு

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 6 - முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை பிப்ரவரி 19 ம் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை சரியில்லை, அணை பலவீனமாக உள்ளது, உடைந்தால் பேராபத்து என்று கேரள அரசு பிரச்சினை கிளப்பியது. இதையடுத்து அதை மறுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்தக் குழு முல்லைப் பெரியாறு அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. ஆய்வறிக்கையும் பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அணை நல்ல பலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இறுதிக் கட்ட விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ம் தேதி நடைபெறும் என்றும், ஜனவரி 28 ம் தேதி இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் ஆனந்த் குழுவின் அறிக்கை நகல்களை கேரள அரசு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை இரு மாநில அரசுகளும் பரிசீலனை செய்து, அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது குறித்து ஜனவரி 28 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டை அணுகி விளக்கம் கோரலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்