முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற முற்றுகை: வி.கே.சிங்கின் கருத்துக்கு முன்னாள் தளபதிகள் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 6- பாராளுமன்ற முற்றுகை தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் கூறியுள்ள கருத்துக்கள் அவர் வகித்த பதவிக்கு உரியவைகளாக இல்லை என்று முன்னாள் ராணுவ தளபதிகள் விமர்சித்துள்ளனர். முன்னாள் ராணுவ தளபதி வி.கே சிங், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற ஹசாரேவின் கோரிக்கையை அவர் ஆதரித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், கரும்பு விவசாயிகள் சார்பில் வரும் டிசம்பர் 4 ம் தேதி நடத்தவுள்ள பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். இது குறித்து அவருக்கு முன் ராணுவ தளபதியாக பதவி வகித்த தீபக் கபூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவது முன்னாள் ராணுவ தளபதிக்கு அழகல்ல என்றும் ஓய்வு பெற்ற பிறகும் அவரை ராணுவத்தினர் தங்களது முன்னாள் தலைவராகத்தான் கருதுகின்றனர். எனவே போராட்டம் போன்ற விஷயங்களில் கலந்து கொள்வது நல்லதல்ல என்றார். மற்றொரு முன்னாள் ராணுவ தளபதி மாலிக் கூறுகையில், வி.கே. சிங் செய்வது சட்டரீதியாக தவறில்லை என்ற போதிலும் நற்பண்புகள் அடிப்படையில் பார்த்தால் அவருக்கு பொருத்தமானதல்ல. பொதுவாக பேசும் போது யாரும் கவனமுடன் பேச வேண்டும். முன்னாள் ராணுவ தளபதிகள் பொறுப்பானவர்களாக பார்க்கப்பட வேண்டுமே தவிர, கடுமையான கருத்துக்களை கூறுபவர்களாக இருக்க கூடாது என்றார். எனினும் முன்னாள் ராணுவ தளபதி பக்ஷி மட்டும் வி.கே. சிங்கின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
அமெரிக்க அதிபர்கள் 70 சதவீதம் பேர் முன்னாள் ராணுவத்தினராக இருக்கும் போது வி.கே. சிங் ஏன் அரசியலில் குதிக்க கூடாது. முன்னாள் ராணுவ தளபதி என்ற முறையில் அவரும் அரசியலில் ஈடுபட தார்மீக உரிமை உண்டு என்று குறிப்பிட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்