முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து: மத்தியஅரசு பாரபட்சம் காட்டுகிறது

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

பாட்னா, நவ. - 6 - பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க மறுப்பதன் மூலம் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பாட்னாவில் முதல்வர் நிதீஷ் தலைமையில் அதிகார் பேரணி நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் சரத்யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் நிதீஷ்குமார் பேசியதாவது, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதை ஏற்க மறுத்து மத்திய அரசு பாரபட்சமாக நடந்து வருகிறது. 2014 ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க ஒப்புக் கொள்ளும் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்தப்படும். நமது கோரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு அந்தஸ்தை அளிப்பதற்கான தகுதி பீகாருக்கு இல்லை என்று கூறி நமது கோரிக்கையை நிராகரித்து விட்டனர். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரி சட்டப் பேரவையில் 2009 ம் ஆண்டே தீர்மானம் நிறைவேற்றினோம். அனைத்து கட்சிகளின் சார்பில் பிரதமரை சந்திக்க முயன்றோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. பீகார் மக்கள் மத்திய அரசின் இந்த போக்கை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நீதிக்காக போராடுவார்கள் என்றார் நிதீஷ்குமார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago