முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதின் கட்காரியின் பேச்சுக்கு மணீஷ்திவாரி கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. - 6 - சுவாமி விவேகானந்தரையும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டு பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நிதின் கட்காரியையும் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்பையும் ஏன் ஒப்பிட்டு பேசக் கூடாது என்கிறது காங்கிரஸ் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்காரி, சுவாமி விவேகானந்தருக்கும், தாவூத் இப்ராகிமுக்கும் அறிவு என்பது ஒரே மாதிரியானதுதான். ஆனால் அவர்கள் அதை பயன்படுத்திய விதம் வெவ்வேறானது. ஒருவர் சமூக மேம்பாட்டுக்காக அந்த அறிவை பயன்படுத்தினார். மற்றொருவரோ சமூகத்தை சீர்குலைக்கவும் ்இரக்கமற்ற பயங்கரவாதத்தை பரப்புவதற்கும் பயன்படுத்தினார் என்று கூறியிருந்தார். நிதின் கட்காரியின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. சுவாமி விவேகானந்தர் பெயரில் அண்மையில் யாத்திரையெல்லாம் நடத்திய மோடியையும் அவரது ஆதரவாளர்களையும் இந்த விவகாரத்தில் பதில் சொல்லுமாறு ட்விட்டரில் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங். இதேபோல் நாடு போற்றும் ஆன்மீக தலைவரை குற்றவாளி ஒருவருடன் எப்படி இணைத்து பேசலாம் என்று மணிஷ் திவாரி விமர்சித்திருக்கிறார். காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவரான ஜகதாம்பிகா பாலோ இன்னும் ஒருபடி மேலே போய் காட்டமாக, கட்காரியையும் கசாப்பையும் ஒப்பிட்டுப் பேசினா பா.ஜ.க என்ன பதில் சொல்லும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனிடையே தாம் விவேகானந்தரையும் தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டுப் பேசவில்லை என்றும் சிலர் நல்ல செயல்களுக்காக தங்களது அறிவை பயன்படுத்துகின்றனர். சிலர் தவறான நடத்தைகளுக்காக பயன்படுத்துகின்றனர் என்பதற்காக சுட்டிக் காட்டிப் பேசினேன் என்று கட்காரி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்