முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வினரின் வன்முறை வெறியாட்டத்தை அடக்க ஜெயலலிதா வலியுறுத்தல்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.13 - மடத்துக்குளம் அ.தி.மு.க. வேட்பாளர் சி.சண்முகவேலு மீது தாக்குதல், பென்னாகரம் தே.மு.தி.க. கிளைச்செயலாளர் அசோகன் அடித்துக்கொலை ஆகியவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெயலலிதா, தி.மு.க.வினரின்  வன்முறை வெறியாட்டத்தை கட்டுப்படுத்த தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிக்கும் மத்திய ரிசர்வ் படையை அனுப்பி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்த கருணாநிதி, பண பலம், படை பலம், அதிகார பலம் ஆகியவற்றின் மூலம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கோவை மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடுக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மைனாரிட்டி தி.மு.க. அரசின் அமைச்சர் சாமிநாதன் ஏற்பாடு செய்து இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, கழக உடன்பிறப்புகள் அந்த வீட்டினை முற்றுகையிட்டதுடன், தேர்தல் அதிகாரிக்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

மடத்துக்குளம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் சி.சண்முகவேலுவும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இந்தத் தருணத்தில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வீட்டிலிருந்து தி.மு.க.வினர் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.  

இந்தத் தாக்குதலில் சண்முகவேலு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.  இதன் விளைவாக அந்தப் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. அ.தி.மு.க. திருப்nullர் மாவட்டச்செயலாளர் மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமாகிய சி. சண்முகவேலு மற்றும் அ.தி.மு.க.வினர் பலர் மீது தி.மு.க.வினர் நடத்தியுள்ள  கொலை வெறித் தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படி கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த அன்புச் சகோதரர் சண்முகவேலு nullரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் தாக்குதலுக்கு காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசின் அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.க.வினரை கைது செய்ய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். 

இது மட்டுமின்றி, பென்னாகரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக தி.மு.க.வினர் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய தே.மு.தி.க. கிளைச் செயலாளர் அசோகனை தி.மு.க.வினர் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலையே செய்துள்ளனர். தி.மு.க.வினரின் இந்த கொலை வெறியாட்டத்திற்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதில் சம்பந்தப்பட்ட தி.மு.க.வினரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். 

இந்த வன்முறை வெறியாட்டத்தில் மரணமடைந்த தே.மு.தி.க. கிளைச் செயலாளர் அசோகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

தற்போது தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் போதுமான மத்திய ரிசர்வ் படைகளை அனுப்பி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,  வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தையும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும், காவல் துறையையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago