முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 2தேர்வு வினாத்தாள் வெளியான விவகரம். ஒடிசா அச்சகஊழியர் கைது

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

ஈரோடு , நவ.- 6 -  குரூப் 2 தேர்வு வினாத்தாள்   வெளியான  விவகாரத்தில்  ஒடிசாவை சேர்ந்த அச்சக ஊழியர் ஒருவரை  சி.பி.சி .ஐ.டி போலீசார்  கைது செய்துள்ளனர். தமிழ் நாட்டில்  கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப் -2 தேர்வு நடைபெற்றது.ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மையத்தில் கேள்விதாள் நகளை  வைத்திருந்தாக  ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தனக்கொடி மற்றும் அவரது கணவர் செந்தில் உள்பட  15 பேரை  இது வரை போலீசார் கைது செய்துள்ளனர்  இந்த விவகாரத்தில் சென்னையை  சேர்ந்த தியாகராஜன் ,செந்தில் குமார் ,ஸ்ரீதர் ராஜ் (பாலன்) ஆகியோர் மூலம் தமிழகத்தில் பல இடங்களில் கேள்விதாள் வெளியானது  என்பது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இதில் ஒடிசா மாநில தலை நகர் புவனேஸ்வரத்தில் ரயில்வே துறையில் வேலை செய்த  ஆனந்த ராவ் கைது செய்யப்படுள்ளார். இந்நிலையில்  இந்த வழக்கு  ஈரோடு நகர காவல் நிலையத்தில்  இருந்து சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ஒடிசாவைச்சேர்ந்த  சிவில் வக்கீல் ககூன் சேனாதி பிகாரி(49) என்ற நபரை கடந்த 1 ந்தேதி சி.பி.சி .ஐ.டி போலீசார்  கைது செய்தனர்.  அவரிடம் போலீசார் விசரானை செய்ததில்  ஒடிசாவில் உள்ள  ஓர்  அச்சகத்தில் வேலை செய்து வந்த புவனேஸ் வரத்தை சேர்ந்த கோத்ரா மோகன் மந்தன்  என்ற நபரிடம்   இருந்து ககூன் வினாத்தாள் களை பெற்றதும் தனது நண்பர் ஆனந்தராவ்  மூலம் தமிழ்நாட்டில் வினாத்தாள் களை பல லட்ச ரூபாய்களுக்கு  விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து  ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்  பதுங்கியிருந்த கோத்ரா மோகன் மந்த்ராவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago