முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்பக் கோளாறால் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்:

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, நவ. - 7 - 400 ஹஜ் யாத்ரீகர்களுடன் ஜெத்தாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹஜ் யாத்ரீகர்கள் 400 பேருடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 விமானம் சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் திடீர் என்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் தீப் பிடித்தால் எச்சரிக்கும் அலாரம் திடீர் என்று வேலை செய்யாததால் தான் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இருந்தனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மிசோரம் முதல்வர் லால் தன்ஹாவ்லாவை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் இருந்து தலைநகர் அய்ஸ்வால் சென்றது. ஆனால் அய்ஸ்வாலில் மோசமான வானிலை நிலவியதால் விமானம் நேற்று முன்தினம் மதியம் 2.20 மணிக்கு மீண்டும் கொல்கத்தாவுக்கே திரும்பியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்