Idhayam Matrimony

டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய கெளரவவிருது அளிக்கப்பட்டது

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, நவ. - 7 - இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரானசச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலிய அரசு உயரிய கெளரவ விருதை நேற்று வழங்கி சிறப்பித்தது. உலக கிரிக்கெட் அரங்கத்தில் பல்வேறுசாதனைகளை ப் புரிந்து மணி மகுடம் சூட்டியுள்ள டெண்டுல்கருக்கு இந்த விருது மேலும் ஒரு சிறப்பாகும். நேற்று நடைபெற்ற விழாவில் ஆஸ்திரேலிய அரசு டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருதை அளித்தது. வேறு நாட்டைச்சேர்ந்தவருக்கு இந்த விருது அரிதாக அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் மண்டல அமைச்சரும், மண்டல வளர்ச்சி மற்றும் கலை த் துறைசார்பிலான அமைச்சரான சைமன் கிரீன் இந்த விழாவில் டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேயா விருதை வழங்கி கெளரவித்தார். இதன் மூலம் இந்த ரிருதை ப் பெறும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமை சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக முன்னாள் அட்டர்னி ஜெனரலான சோலி சொ ராப்ஜி இந்த விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெற்ற பின்பு நிருபர்க ளைச் சந்தித்த டெண்டுல்கர் ஆஸ்திரே லிய அணி ஒரு சிறந்த அணி என்றும் கடுமையாகப் போராடக் கூடிய அணி என்றும் பாராட்டினார். மேலும் தனது இளமைக் காலத்தில் மூன்றரை மாதங்கள் ஆஸ்திரேலியாவி ல் தங்கி இருந்ததாகவும், அது தன்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றியது என்றும் சச்சின் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் நான் தங்கியிருந்த மூன்றரை மாதம் என்னை முற்றிலும் மாற்றி விட்டது. உலகின் எந்த ஒரு பெளலரையும் நான் சந்திக்க தயார் ஆகிவி ட்டேன் என்றும் டெண்டுல்கர் குறிப் பிட்டார். கடந்த மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு இந்தியா வந்திருந்த போது, டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலி யாவின் ஆர்டர் ஆப் விருது வழங்கி கெளரவிக்கப்படும் என்று அறிவித்தார். ஆஸ்திரேலிய பயணத்தில் மறக்க முடி யாத சம்பவம் எது என்று லிட்டில் மா ஸ்டரிடம் கேட்ட போது டான் பிராட்மேன் 90 -வது பிறந்த நாள் விழாவிற்கு என்னை அழைத்து இருந்தார். அதனை மறக்க முடியாது என்றார் அவர். ஆஸ்திரேலியாவில் நான் விளையாட பேட்டிங் செய்ய களமிறங்கும் போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப் படுத்துவார்கள். நான் விளையாடும் கடைசி போட்டி இது என்றும் அவர்க ள் மத்தியில் ஒரு கருத்து இருந்தது. இத னை நினைத்து நான் சிரிப்பேன் என்று ம் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்