முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவுக்கு பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங் வாழ்த்து

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.- 8 - அமெரிக்க அதிபர் தேர்தலில்2-வது முவையாக வெற்றி வாகை சூடிய பாரக் ஒபாமாவுக்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. அமெரித்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று 2-வது முறையாக அதிபர் ஆகியுள்ளார் ஒபாமா. அவருக்கு இந்தியா தனது பாராட்டுதலையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்க உறவு மேம்படும்.அமெரித்காவில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் அந்த நாட்டு மக்கள் ஒபாமாவை அதிபராக 2-வது முறையாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்காக இந்தியாவும், இந்திய மக்களும் அவருக்கு தங்தளது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஒபாமாவுக்கு, இந்தியா சார்பில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் தனித்தனியாக வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு, ஒத்துழைப்பு நீடிக்கும் என்றும் அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்