முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்காரி தலைவராக நீடிக்க பாஜகவில் கடும்எதிர்ப்பு நிலவுகிறது

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

டெல்லி, நவ. - 8 - ஊழல் குற்றச்சாட்டாலும் சர்ச்சைகளாலும் சிக்கித் தவித்து வரும் பாஜக தலைவர் நிதின் கட்காரி அந்தப் பதவியில் தொடர பாஜகவிலேயே கடும் எதிர்ப்பு நிலவி வருவதாக மூத்த பாஜக எம்பியும் வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி கூறியுள்ளார். நேற்று தான் கட்காரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவரது மகன் மகேஷ் ஜேத்மலானி பாஜகவின் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். நிதின் கட்காரி, மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து பல்லாயிரம் கோடி முறைகேடுகளில் ்டுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குழு. இதை கட்காரி மறுத்து வந்தாலும், அவர் தவறு செய்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால், ஆர்எஸ்எஸ் பின்பலம் கொண்ட கட்காரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் பாஜக உள்ளது. இந் நிலையில் இன்று ராம் ஜேத்மலானி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கடும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் கட்காரி உடனே பதவி விலக வேண்டும். பாஜகவில் கட்காரிக்கு எதிரான மன நிலையே நிலவுகிறது. மூத்த தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், சத்ருகன் சின்ஹா ஆகியோ கட்காரி கட்சித் தலைவராக நீடிப்பதை எதிர்த்து வருகின்றனர்.இவர்கள் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். கட்காரிக்கு எதிரான எனது மகன் மகேஷ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது மிகச் சரியான நடவடிக்கையே என்றார் ஜேத்மலானி.கட்காரியைப் பிடிக்காவிட்டாலும் அவரை எதிர்த்தால் ஆர்எஸ்எஸ்சின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஆழ்ந்த அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago