முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பாகிஸ்தானில் தஞ்சம்​- ஷிண்டே

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

ரோம், நவ.- 8 - மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய முக்கிய குற்றவாளிகள் பலருக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.ரோம் நகரில் நடைபெற்று வரும் இண்டர்போல் கூட்டத்தில் அவர் பேசுகையில், 1993-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 இந்தியர்கள் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக இருந்த பலருமே இப்போதும் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். இண்டர்போல் அமைப்பால் சிகப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையிலும் அவர்களை பாதுகாக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளின் போது இந்த குற்றவாளிகளை ஒப்படைக்கக் கோரி ஆதாரங்களைக் கொடுத்தோம். ஆனால் பலனில்லை. பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்தத் தீவிரவாதிகளால் மும்பை தொடர் குண்டுவெடிப்பை விட மிகவும் பயங்கரமான ஒரு தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது. தீவிரவாதிகளின் செயல்பாடுகளினால் இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பீதி ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago