முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து மக்களும் குறைந்தபட்ச வசதியைபெற மகளிர்சுய உதவிக்குழுக்கள் பாடுபடவேண்டும்

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

திண்டுக்கல், நவ.- 8 - திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 100 சதவீத எழுத்தறிவு விருது வழங்குவதற்கான விளக்கக் கூட்டம் மகளிர் திட்ட அலுவலர் பிரேமா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் தலைமை வகித்து சிறப்புரையாற்றி பேசியதாவது தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்தபடி தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் 2012-13ம் ஆண்டு முதல் மாநில அளவில் 30 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 100 சதவீத எழுத்தறிவு வழங்கவும், இதில் ர.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த விருதினைப் பெற தகுதியுடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுவது குறித்து இநித கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த 100 சதவீத எழுத்தறிவு விருது வழங்குவதன் நோக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் எழுத்தறிவு பெற்ற கூட்டமைப்பாக மாற்றவும் இவர்கள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு பிறர் உதவி இல்லாமல் தாமாகவே சென்று வங்கி கணக்குகள் தொடங்கவும், அனைத்து விதமான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும் முழுமையாக எழுதப்படிக்க தெரிந்திருக்கவும் இதன்மூலம் வழிவகை செய்யப்படுகிறது. கூட்டமைப்பு சிறப்பாக செயல்பட இதுபோன்ற கல்வி எழுத்தறிவு முக்கியம் என்பதை தமிழக முதல்வர் உணர்ந்து 100 சதவீத எழுத்தறிவின் விருது வழங்க ஆணையிட்டுள்ளார். இதனை அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் பயன்படுத்தி பயனடைய வேண்டும். அனைத்து மக்களும் ஏற்றத்தாழ்வின்றி குறைந்தபட்ச வசதிகளைப் பெற குறைந்தபட்சம் கல்வியைப் பெற மகளிர் சுய உதவிக்குழு பாடுபட வேண்டும். முன்னதாக சமுதாய கருத்தாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராமப்புற மகளிர் அனைவரையும் நேரில் சந்தித்து தேவையான மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் பரவும் மற்றும் பரவா நோய்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நமது நலன் மட்டுமல்லாமல் நமது எதிர்கால சந்ததியினருக்காக நமது நாட்டையும், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் புதுவாழ்வுத் திட்ட இயக்குனர் மணிராஜ், மகளிர் திட்ட உதவித் திட்ட அலுவலர் சீத்தாராமன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், சமுதாய கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்