பாகிஸ்தான் பாடகருக்கு ரூ 15 லட்சம் அபராதம்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      உலகம்

 

புது டெல்லி,பிப்.21  - டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்ட பாகிஸ்தான் பாடகருக்கும் மற்றும் அவரது மேனேஜருக்கும் தலா ரூ 15 லட்சம் அபராதம் விதித்து வருவாய் புலனாய்வு துறை உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ரஹத்அலிகான். இவர் இந்தி சினிமா பாடல்களையும் பாடியிருக்கிறார். ரஹத்தும், அவரது மேனேஜர் மரூப்பும் துபாய் செல்வதற்காக விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தனர். அவர்களை சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 24 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 60 லட்சம்) கைப்பற்றப்பட்டது. விதிமுறைகளின் படி விமான பயணம் மேற்கொள்ளும் பயணி 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் கொண்டு செல்லக் கூடாது. அதற்கு மேல் கொண்டு செல்ல வேண்டுமானால் சுங்கத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எனவே பாடகர் ரஹத்துக்கும், அவரது மேனேஜர் மரூப்புக்கும் சுங்க சட்டம் மற்றும் வெளிநாட்டு பணம் மேலாண்மை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து விமான பயணத்தின் போது 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் கொண்டு வந்த ரஹத் அலிகானுக்கும், அவரது மேனேஜர் மரூப்புக்கும் தலா ரூ. 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை வருவாய் புலனாய்வு துறை நேற்று பிறப்பித்தது. அபராத தொகை செலுத்திய பிறகு இருவரும் பாகிஸ்தான் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: