ஒபாமா,ராம்னி செய்தவிளம்பர செல்வு ரூ.3882 கோடியாம்!

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், நவ. - 9 - அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னியும் விளம்பரத்திற்காக மொத்தமாக ரூ. 3882 கோடி பணத்தை அள்ளி விட்டுள்ளதாக அமெரிக்க மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருவரும் சேர்ந்து 12 மாகாணங்களில் செய்த செலவு ரூ. 3882 கோடியே 89 லட்சத்து 20 ஆயிரமாம். ஒஹியோ மாகாணத்தில்தான் இரு வேட்பாளர்களும் மிகப் பெரிய அளவில் பணத்தை வாரியிறைத்துள்ளனர். அங்குள்ள விமான நிலையம், உள்ளூர் கேபிள் டிவி, ரேடியோ, டிவி என அனைத்திலும் இவர்கள் விளம்பரம் செய்ய 796.21 கோடியை செலவழித்துள்ளனராம். புளோரிடாவில் 725 கோடி, விர்ஜீனியாவில் 599 கோடி இன்னும் இரு முக்கிய மாகாணங்களான புளோரிடாவில் இருவரும் சேர்ந்து செய்த விளம்பரச் செலவு ரூ. 725.31 கோடியாகும். விர்ஜீனியாவில் ரூ. 599.88 கோடியாகும். மொத்தம் 10 டி.வி நிறுவனங்கள்தான் இந்த விளம்பரங்களால் பெரும் லாபம் பார்த்துள்ளனவாம். ஒபாமா தரப்பில் செய்யப்பட்ட பிரசார விளம்பரச் செலவின் தொகை ரூ. 1417 கோடியே 91 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ராம்னியின் விளம்பரச் செலவு ரூ. 981 கோடியே 63 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: