முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 ஆண்டுகளுக்கு பிறகு தடைநீக்கம் குறித்து அசாருதீன் கருத்து

சனிக்கிழமை, 10 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, நவ. - 10 - சூதாட்ட புகாரில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ஆந்திர ஐகோர்ட் ரத்து செய்ததையடுத்து அசாருதீன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே 2006 ம் ஆண்டில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சூதாட்டம் நடந்ததாக தென்னாப்பிரிக்க கேப்டன் ஹான்சி குரோனியே மீதும், இந்திய கேப்டன் அசாருதீன் மீதும் புகார் கூறப்பட்டது. இந்த புகாரை குரோனியே ஒப்புக் கொண்டார். அதே நேரத்தில் தன்னை சூதாட்டக்காரர்களுடன் அசாருதீன்தான் அறிமுகப்படுத்தினார் என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து அசாருதீனுக்கு ஆயுட்கால தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்தது. இதை எதிர்த்து அசாருதீன் வழக்கு தொடுத்தார். இதை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே ஆந்திர மாநில ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் அசாருதீன். 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அசாருதீன் மீதான ஆயுட்கால தண்டனையை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து அசாருதீன் கூறியதாவது,  நான் 12 ஆண்டு காலமாக வேதனைகளையும், அவமானத்தையும் சந்தித்து வந்தேன். இப்போது அவற்றில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. நான் குற்றமற்றவன் என்று எனக்கு தெரியும். அது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டாலும் அதற்காக நான் கிரிக்கெட் வாரியம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. யார் மீதும் குறை சொல்ல போவதில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இப்போது நான் மொரதாபாத் தொகுதி எம்.பி.யாக இருக்கிறேன். அந்த பகுதி மக்களின் மீதே எனது கவனத்தை செலுத்துவேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்