முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் பணக்காரர்களை விடஏழைகள் அதிகஅளவில் புகை பிடிக்கிறார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,நவ.- 11 - இந்தியாவில் பணக்காரர்களைவிட ஏழைகள்தான் அதிகம் பேர் புகை பிடிக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. புகையிலை மெல்லுவதற்கு எதிரான பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் இந்தியாவில் ஆண்களில் 35.3 சதவீதம் பேரும் பெண்களில் 7.6 சதவீதம் பேரும் புகை பிடிப்பது தெரியவந்துள்ளது. அதுவும் நாட்டில் பணக்காரர்களை காட்டிலும் ஏழைகள்தான் அதிகம் பேர் புகை பிடிப்பதும் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு சார்பாக உலக சுகாதார ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் மொத்தம் புகை பிடிப்பவர்களில் 46.7 சதவீதம் பேர் ஏழைகள் என்றும் 21.8 சதவீதம் பேர் பணக்காரர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஜனத்தொகையில் புகை பிடிப்பவர்கள் ஆண்களில் 35.7 சதவீதமும் பெண்களில் 7.6 சதவீதமும் உள்ளனர். அதிலும் இவர்களில் பணக்காரர்களை காட்டிலும் வருவாய் குறைந்த ஏழைகள்தான் அதிகம் பேர் என்றும் தெரியவந்துள்ளது. புகை பிடிப்பதால் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள்தான் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த வருபவர்களில் ஏழைகள்தான் அதிகமாக உள்ளனர் என்று திருவனந்தபுரத்தில் உள்ள பிராந்திய புற்றுநோய் சிகிச்சை மைய நிபுணர் டாக்டர் ஆர். ஜெயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்