முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்தியாவசிய ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் நிதிகுறைப்பு இருக்காது

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,நவ.- 11 - ராணுவத்திற்கு தேவையான அத்தியாவசிய தளவாடங்கள் வாங்குவதில் பட்ஜெட்டில் நிதி குறைப்பு இருக்காது என்று ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி உறுதிபடத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதால் அனைத்து துறைகளிலும் சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதனால் ராணுவத்திற்கும் நிதி குறைக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இந்தநிலையில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி நேற்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ராணுவ அமைச்சக செலவில் சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக ராணுவத்திற்கு தேவையான அத்தியாவசிய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக பட்ஜெட்டில் நிதி குறைக்கப்படமாட்டாது என்றார். ஒவ்வொன்றும் மத்திய அரசின் நிதிநிலையை பொருத்தே உள்ளது. நாட்டின் முப்படைகளும் எதையும் சந்திக்க தயார்நிலையில் இருக்க வேண்டுமானால் தேவையான வெடிமருந்து பொருட்கள், ஆயுதங்கள்,தளவாடங்கள் அவசியம் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நிதி குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாலும் மத்திய அரசின் சிக்கன நடவடிக்கையாலும் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அந்தோணி, சிக்கன நடவடிக்கை காரணமாக தேவையான முக்கிய ஆயுதங்களை வாங்க முன்னுரிமை கொடுக்கும்படி ராணுவம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார். முன்னதாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் சிறந்த முறையில் ராணுவ ஆய்வு செய்ததற்காக கே.சுப்பிரமணியம் விருதை ஆராய்ச்சியாளர் காந்தி வாஜ்பாய்க்கு அந்தோணி வழங்கி கெளரவித்தார். இந்தியாவை சுற்றியுள்ள சூழ்நிலையை சமாளிக்கும் வகையிலும் ராணுவத்திற்கு தேவையான முக்கிய ஆயுதங்கள் குறித்த ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிதி ஆதாரங்களை பயன்படுத்தும்படியும் ராணுவ ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தை அந்தோணி கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago