முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கனடாபிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

பெங்களூர், நவ. - 11 - இந்தியா வருகை தந்துள்ள கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் பெங்களூரில் மாணவர்களுடன் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளை விளையாடினார். கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தமது மனைவியுடன் இந்திய சுற்றுலா தலங்களைப் பார்வையிட வருகை தந்துள்ளார். பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் வந்த ஹார்பர், புகழ்பெற்ற பிஷப் காட்டன் பள்ளிக்கு சென்றார். அப்பள்ளியில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் 12 ம் வகுப்பு மாணவனும் கிரிக்கெட் கேப்டனுமான அங்கூர் பிஸ்வாஸுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது சில பந்துகளை லாவகமாக சமாளித்த ஹார்பர், 9 ம் வகுப்பு மாணவன் வீசிய பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். இதேபோல் அதே பள்ளியின் ஹாக்கி மைதானத்துக்கும் சென்ற ஹார்பர், பெண்கள் அணிக்காக ஹாக்கி மட்டையை ஏந்தி ஆடுகளத்தில் இறங்கினார். அவருக்கு எதிர் அணியில் இருந்தவர் கனடாவின் விளையாட்டுத் துறை அமைச்சர் பல்ஜித் கோசல்! சுமார் 10 நிமிடம் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இறுதியில் ஹார்பர் இடம் பிடித்திருந்த பெண்கள் அணி தோல்வியடைந்தது. அதன் பின்னர் ஹார்பர் இந்திய பயணத்தை நிறைவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்