ரப்பானி-பிலாவல் இடையேகாதல்: புரளியை கிளப்பியவர் கைதானார்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

டாக்கா, நவ. - 11 - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் நிலையில் அவருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவுக்கும் இடையே கள்ளக் காதல் இருப்பதாக செய்தி பரப்பியவர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஹினா ரப்பானிக்கும் பிலாவல் பூட்டோவுக்கும் இடையேயான காதல் விவகாரம் அண்மையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் பாகிஸ்தானைவிட்டு ஓடிப் போகவும் முடிவு செய்துவிட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின. இருவரும் கிஸ் அடிக்கும் படங்களும் வெளியாயின. இதனால் ஹினா ரப்பானியின் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்கு வேட்டு வைக்கப்படும் நிலை இருந்தது. ஆனால் இருவருமே இதை மறுத்த நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பின்னணி இருப்பதாகவும் இதன் தூண்டுதலிலேயே வங்கதேச இணைய பத்திரிகையில் இச்செய்தி வெளியானதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஹினா ரப்பானி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் அங்குள்ள நிலையில் காதல் கிசுகிசுவை பரப்பிய சலாவுதின் ஷோயப் சவுத்ரி என்பவரை பண மோசடி வழக்கில் அந்நாட்டு போலீசார் கைது செய்திருக்கின்றனர். இவர் ஏற்கெனவே இஸ்ரேலின் மொசாட் உளவுப் படைக்கு வேவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் சிறைக்குப் போனவர். இருப்பினும் பாகிஸ்தான் - வங்காள தேசத்திற்கிடையே பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்க சவுத்ரி முன்கூட்டியே கைது செய்யப்பட்டுள்ளார் என வங்காள தேச ஊடகங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: