முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பாரம்பரியம் ஒன்றுதான்:நிதீஷ்குமார்

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

கராச்சி, நவ.- 12 - இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பாரம்பரியத்தையும், வரலாற்றையும் உடையது என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறினார். பாகிஸ்தானுக்கு ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிதீஷ்குமாருக்கு, சிந்து மாகாண முதல்வர் சயீத் அலி ஷா விருந்து கொடுத்தார். அப்போது நிதீஷ்குமார் பேசியதாவது: பாகிஸ்தான் பயணம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தான் மக்களுக்கு நல்வாழ்த்துக்களை கொண்டு வந்துள்ளேன்.இங்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இங்குள்ள விருந்தோம்பல் என்னை நெகிழ வைத்து விட்டது. இரு நாடுகளுக்கிடையே சகோதரத்துவமும், நல்லுறவும் மேம்பட வேண்டும்.இரு நாட்டிலும்அமைதி நிலவ பரிபூரண ஒத்துழைப்பு அவசியம்.
கடந்த 7 ஆண்டுகளாக பீகார் முதல்வராக இருந்து தான் ஆற்றிவரும் பணிகள் குறித்து பேசிய அவர், வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு வசதி, கல்வி, சுகாகாரம், வேளாாண்மை எனஅனைத்து நிலைகளிலும் பீகார் வேகமாக முன்னேறி வருகிறது. சிறுபாண்மையினர் மிகுந்த பாதுகாப்புடன் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது சமூக பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல நிர்வாகம்என்ற அடிப்படை கொள்கையே மாநிலத்தின் வளர்ச்சிக்கு காரணம். ஆட்சி,அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல் பற்றி தெரிய வந்தால்,யாராக இருந்தாலும், கடும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மு ன்னதாக பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னாவின் நினைவிடத்துக்கு சென்று அவர் அஞ்சலி செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்