முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவாலின் கறுப்புபண குற்றச்சாட்டு குறித்து விசாரணை:

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, நவ. - 12 - கெஜ்ரிவால் கூறிய கறுப்பு பண குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள், அதற்கு வெளிநாட்டு வங்கியான எச்.எஸ்.பி.சி வங்கி உதவியது உள்ளிட்ட பல அதிர்ச்சி தரும் தகவல்களை ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். மொத்தம் ரூ. 6 ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை 700 இந்தியர்கள் அங்கு பதுக்கி வைத்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்து பிரான்சு அரசு கடந்த ஆண்டு அளித்த தகவலின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் வருமான வரித்துறை இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், இந்தியர்களின் கறுப்பு பணம் குறித்து பிரான்சு அரசு அளித்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவல்கள் தொடர்பாக கூடுதல் விவரங்களை பெறுவதற்காக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வளவு நாளாக இத்தகவலை மத்திய அரசு வெளியிடாமல் இருந்தது ஏன்? என்றும் கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நரேஷ் கோயல், பர்மன்ஸ் உள்ளிட்ட பெரும் பணக்கார தொழிலதிபர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த வேண்டும். அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்