முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதின் கட்காரிக்கு உமாபாரதி ஆதரவு தெரிவித்திருந்தார்

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 12 - ஊழல் புகாரில் சிக்கி உள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் கட்காரி பதவி விலக வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த சிலர் வலியுறுத்தி வரும் நிலையில் மூத்த தலைவர் உமா பாரதி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ராம்ஜெத்மலானியும், அவரது மகன் மகேஷ் ஜெத்மலானியும் கட்காரி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சில நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். யாரை தலைவராக நியமிக்க வேண்டும். யார் பதவி விலக வேண்டும் என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் அவர்களால் நுழையக் கூட முடியாது. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தம் மீது ஹவாலா குற்றச்சாட்டு எழுந்த போது தனது பதவியை ராஜினாமா செய்தது போல கட்காரியும் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கட்காரிக்கு ஆதரவாக உமா பாரதி கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்