முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரவிந்த் கெஜ்ரிவால் ஒருகவர்ச்சி நடிகையை போன்றவர்​திக் விஜயசிங்

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 12 - அரவிந்த் கெஜ்ரிவால் பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி ஷாவந்த்தை போன்றவர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜயசிங் கிண்டலடித்துள்ளார். சமூக ஆர்வலராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் அரசியலுக்கு வந்த நாள் முதல் முக்கிய தலைவர்கள் மீது எல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மத்திய மந்திரி ஷல்மான் குர்ஷித்தில் தொடங்கிய இவர், தற்போது கட்காரி வரை ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. 2 தினங்களுக்கு முன் சுவிஸ் வங்கிகளில் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களால் மறைத்து வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து இவர் அதிரடி தகவலை வெளியிட்டார். ரூ. 6 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலை வெளியிடுவதால் அடுத்து இவர் என்ன சொல்லப் போகிறார்? யாரை குற்றம் சாட்டப் போகிறார்? என்ற ஆவல் மக்களிடம் எழுந்துள்ளது. அது மட்டுமல்ல, நான் டெங்கு கொசுவை விட ஆபத்தானவன் என்றும் இவர் தன்னைத் தானே வர்ணித்திருக்கிறார். காங்கிரசையும், பா.ஜ.க.வையும் நான் கடிக்க ஆரம்பித்தால் பின்னர் அவர்களுக்கு பிரச்சினைதான் என்றும் இவர் அபாய சங்கு ஊதியிருக்கிறார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒன்றை சொல்லி வரும் கெஜ்ரிவால் பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜயசிங் தற்போது கிண்டலடித்து கருத்து கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் பிரபல இந்தி நடிகை ராக்கி ஷாவந்த் போன்றவர். இருவருமே எதையாவது காட்ட முயலுகிறார்கள். ஆனால் அதில் ஒன்றுமே இருக்காது என்று திக்விஜயசிங் கிண்டலடித்தார். இருப்பினும் உடனடியாக அவர் ராக்கி ஷாவந்திடம் மன்னிப்பும் கோரினார். காரணம், நான் அவருடைய பழைய ரசிகர். எனவே ராக்கி ஷாவந்திடம் மன்னிப்பு கோருகிறேன் என்றும் திக் விஜயசிங் கூறிக் கொண்டார். ராக்கி ஷாவந்த் பாலிவுட் உலகின் கவர்ச்சி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago