முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் நாளை கந்தசஷ்டி திருவிழா ஆரம்பம்

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், நவ. - 12 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை (நவ.13) காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து காப்பு கட்டப்படும். திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்ட பின்பு, விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். திருவிழா நடைபெறும் ஏழு நாட்களும் இரவு ஏழு மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி, கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள்பாலிப்பர். தினம் காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், காலை 11 மற்றும் மாலை 5 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடக்கும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 17 ல் வேல் வாங்குதல், நவ. 18 ல் சூரசம்ஹாரலீலை, நவ. காலையில் தேரோட்டம், மாலை 3 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிமுன்பு தயிர்சாதம் நைவேதனம் படைக்கப்பட்டு, பாவாடை தரிசனம் நடைபெறும். கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக, வல்லப கணபதி, திருவாட்சி, சஷ்டி, வள்ளி, தேவசேனா, ஆஸ்தான மண்டபங்களில் டிவி க்கள் மூலம் யாகசாலை பூஜைகள், சண்முகார்ச்சனை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரே நாளில் இரு திருவிழாக்கள்: ஐப்பசி அம்மாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில்தான் சஷ்டி விரதம் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளியன்றே பிரதமை திதி தொடங்குவதால், அன்றே சஷ்டி விரதம் தொடங்கப்படுகிறது. கடந்த ஆண்டும் தீபாவளி அன்றே சஷ்டி துவங்கியது. சஷ்டி திருவிழா நவ. 13 முதல் தொடங்கி நவ. 19ல் முடிகிறது. அன்றைய தினம் காலையில் கார்த்திகை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது. காலையில் சஷ்டி திருவிழாவிற்காக சுப்பிரமணி சுவாமி, தெய்வானை சட்டத்தேரில் கிரிவலமும், இரவு கார்த்திகை திருவிழாவிற்காக தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago