முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் கந்த சஷ்டி விழா

புதன்கிழமை, 14 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

திருச்செந்தூர், நவ.15  - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. முருகபெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கபட்டது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 3.30 மணிக்கு காலசந்தி தீபாராதனை நடந்தது. பின்னர் 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளிரூதெய்வானை அம்பாளுடன் யாகசாலைக்கு எழுந்தருளினார். யாகசாலையில் பிரதான மூன்று கும்பங்களான சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாள் மற்றும் சிவன், பார்வதி உள்பட பரிவார மூர்த்தி கும்பங்கள் என பல்வேறு கும்பங்கள் வைக்கப்பட்டு 

இருந்தன.

 கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் அர.சுதர்சன் ஆகியோரிடம்  சிவாச்சாரியார்கள் தாம்பூலம் பெற்று யாகசாலை பூஜையை தொடங்கினர். கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்த பின் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு உச்சிகால பூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளிரூதெய்வானையுடன் திருவாடுதுறை ஆதின கந்த சஷ்டி 

மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். கந்தசஷ்டியை முன்னிட்டு திரளான பக்தர்கள் அதிகாலை கடலில் புனித நீராடி காவி நிற மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து கோவில் கிரி பிரகாரத்தில் அங்க பிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர்.

 2ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. நேற்று விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோன்று யாக சாலையில் இருந்த சுவாமி ஜெயநாதருக்கும் அபிஷேகம் நடந்தது. உச்சிகால தீபாராதனைக்கு பின் யாகசாலையில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன், சண்முக விலாசம் வந்து சேர்ந்தார். அங்கு தீபாராதனை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் அர.சுதர்சன் ஆகியோர் செய்து இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago