சீனாவின் புதிய அதிபர் ஜி ஜின்பிங்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங்,நவ.15 - சீனாவின் புதிய அதிபராக ஜி ஜின்பிங்கும் புதிய பிரதமராக லீ கெகியங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத்தவிர கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிக்கும் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் அதிபர் பதவியையும் வகிப்பார். 5 ஆண்டுக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கூடி புதிய அதிபரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்கும் ஆனால் அதிபரோ அல்லது பிரதமரோ 10 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிக்கக்கூடாது. அதிபராக இருந்த ஹூ ஜிண்டாவோ 10 ஆண்டுகள் கட்சி தலைவராகவும் அதிபராகவும் பதவி வகித்துவிட்டார். அவரே தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி சம்மதிக்கவில்லை. இதனைதொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய  கமிட்டி தலைவராக துணை அதிபராக இருந்த ஜின் ஜிங்பிங் நேற்று நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டையொட்டி பெய்ஜிங் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டில் அதிபராக ஜி ஜின்பிங்கும் பிரதமராக லி கெகிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவியில் இருப்பார். அதிபராக இருப்பவர், சீன ராணுவத்தின் தலைவராகவும் இருப்பார். உலகிலேயே சீன ராணுவம் மிகப்பெரியது. சுமார் 2.3 கோடி ராணுவ வீரர்கள் உள்ளனர். இதை வைத்துத்தான் அண்டை நாடுகளை சீனா மிரட்டி வருகிறது. அதிபர் பதவியை வரும் மார்ச் மாதம் ஜி ஜின்பிங்கு ஏற்பார் என்று தெரிகிறது. 59 வயதாகும் ஜி, கம்யூனிஸ்ட் கட்சியின் நிரந்தர ஆட்சிமன்ற குழு உறுப்பினராக இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் ராணுவ கமிட்டியின் துணைத்தலைவராகவும் ஜி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: