முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிர்பூர் டெஸ்ட்: மே.இ.தீவு அணி 527 ரன் குவிப்பு

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மிர்பூர், நவ. 15 - வங்கதேச அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்று வரும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டை இழந்து 527 ரன்னைக் குவித்து ஆட்டத் தை டெக்ளேர் செய்தது. 

மே.இ.தீவு அணி தரப்பில் மூத்த வீரரான சந்தர்பால் இரட்டை சதம் அடுத்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். இதனால் அந்த அணி 500 ரன்னைத் தாண்டி வலுவான நிலையில் உள்ளது. தவிர, போவெல் மற்றும் ராம்டின் ஆகியோ  ரும் சதம் அடித்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய வங்க தேச அணி ரன் எடுக்க திணறி வருகிற து. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 36 ஓவரில் 3 விக்கெட் இழப்பி ற்கு 164 ரன்னை எடுத்து உள்ளது. 

மே.இ.தீவு அணி மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மிர்பூரில் உள்ள ஷெரே பங்க்லா சர்வதேச மைதானத்தில் 13-ம் தேதி துவங்கியது. 

இதில் முதலில் களம் இறங்கிய மே.இ.தீவு அணி வங்கதேச பந்து வீச்சை எளி தாக சமாளித்து ஆடி பிரமாண்ட ஸ்கோரை எடுத்தது. 

மே.இ.தீவு அணி இறுதியில் 144 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 527 ரன்னை எடு த்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. அந்த அணி சார்பில் 1 வீரர் இரட்டை சத மும், 2 வீரர்கள் சதமும் அடித்தனர். 

மூத்த வீரரான சந்தர்பால் அதிகபட்ச மாக, 372 பந்தில் 203 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இரு க்கிறார். இதில் 22 பவுண்டரி அடக்கம். 

போவெல் 178 பந்தில் 117 ரன் எடுத்தா ர். இதில் 18 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். கீப்பர் ராம்டின் 236 பந்தில் 126 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்ட ம் இழக்காமல் இருக்கிறார். இதில் 11 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கெய்ல் 24 ரன்னையும், சாமுவே ல்ஸ் 16 ரன்னையும், டி. பிராவோ 14 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய வங்க தேச அணி மே.இ.தீவின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய து. இறுதியில் அந்த அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 36 ஓவரில் 3 விக் கெட் இழப்பிற்கு 164 ரன்னை எடுத்து உள்ளது. 

வங்கதேச அணி தரப்பில், துவக்க வீரர் தமீம் இக்பால் அதிகபட்சமாக 71 பந்தி ல் 72 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். சக்ரியார் நபீ ஸ் 27 பந்தில் 31 ரன் எடுத்தார். தவிர, நயீம் இஸ்லாம் 60 பந்தில் 27 ரன்னையும், ஷாகிப் அல் ஹசன் 16 ரன்னையும் எடுத்தனர். 

வங்கதேச அணி தற்போது 363 ரன் பின் தங்கிய நிலையில் உள்ளது. மே.இ.தீவு அணி சார்பில், ராம்பால் 49 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். சம்மி 21 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடு த்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்