முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று துவக்கம்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அகமதாபாத், நவ. 15 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் இன்று துவங்க இருக்கிறது. கடந்த வருடம் ஜூலை மற்றும் ஆகஸ் ட் மாதங்களில் இந்திய அணி இங்கி லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி யது. 

இந்தத் தொடரில் இந்திய அணி 0 - 4 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் மோசமாக தோல்வி அடைந்தது. இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 

எனவே உள் நாட்டில் நடைபெறும் இந்தத் தொடரில் இந்திய அணி இங்கிலாந்தை பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 

இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ் டார் குக் தலைமையில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இர ண்டு 20 -க்கு 20 போட்டி, மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொ டர் ஆகியவை நடக்கிறது. 

இரு அணிகளுக்கு இடையேயான முத ல் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் படேல் அரங்கத்தில் இன்று துவ ங்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி ஆயத்தமாக உள்ளது. 

இந்தத் தொடரில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந் து வீசுவதைப் பொறுத்து இந்திய அணியின் வெற்றி உள்ளது. 

இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. சேவாக், காம்பீர், டெண்டுல்கர், விராட் கோக்லி , யுவரா ஜ் சிங், புஜாரா மற்றும் கேப்டன் தோ  னி ஆகியோர் உள்ளனர். 

பெளலிங்கைப் பொறுத்தவரை ஜாஹி ர்கான் மற்றும் இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவ் ஆகியோர் புதுப் பந் தை வீச தயாராக உள்ளனர். 

அஸ்வின், பிரக்ஞ்யான் ஓஜா மற்றும் மூத்த வீரரான ஹர்பஜன் சிங் ஆகி யோர் சுழற் பந்தை வீச ஆயத்தமாக உள்ளனர்.

இதற்கு முன்னதாக நியூசிலாந்து மற்று ம் மே.இ.தீவு ஆகிய அணிகளுக்கு எதி ரான உள்நாட்டுத் தொடரில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசினார். தொடர் நாய கன் விருதினையும் பெற்றார். 

அஸ்வினுக்குப் பக்கபலமாக ஓஜா பந் து வீசியது நினைவு கூறத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இட ம் பிடித்துள்ள ஹர்பஜன் தனது திறமை யை வெளிப்படுத்த வேண்டிய கட்டா யத்தில் உள்ளார். 

இந்தியாவின் சிறந்த துவக்க ஜோடிகளான சேவாக் மற்றும் காம்பீர் இருவ ரும் நல்ல துவக்கத்தை அளித்தால் அது அணியின் வெற்றிக்கு உதவியாக இரு க்கும். 

மேற்படி இருவரும் நீண்ட காலமாக சதம் அடிக்கவில்லை. எனவே அவர்கள் இருவரும் இந்தத் தொடரில் நன்கு ஆடி   ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

மிடில் ஆர்டரில் நட்சத்திர வீரரான டெ ண்டுல்கர், விராட் கோக்லி, புஜாரா யுவராஜ் சிங் மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் அணிக்கு வலு சேர்க்க உள்ளனர். 

இங்கிலாந்து அணியில் கேப்டன் குக், காம்ப்டன், டிராட், பீட்டர்சன், பெல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். எனவே அவர்களது பேட்டிங் வரிசையு ம் நன்றாக உள்ளது. 

வேகப் பந்து வீச முன்னணி வீரரான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் பின் ஆகியோர் தயாராக உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக ஸ்வான் சுழ லை வீச ரெடியாக இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்