முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 70 சதவீத ஓட்டுப் பதிவு

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஏப்.14 - கேரளாவில் நேற்று விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 70 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் இடது கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியும் இரு பெரும் அணிகளாக களத்தில் உள்ளன. இந்த தேர்தலில் மொத்தம் 942 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நேற்று கேரளா முழுவதும் ஒரே கட்டமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 

திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளிலும் வாக்காளர்கள் காலையிலேயே திரண்டு வந்து வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். குறிப்பாக, பெண்கள் காலையிலேயே வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 20 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த ஊர்களில் காலையிலேயே வந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் பாதுகாப்புக்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடைசியாக கிடைத்த தகவலின் படி கேரளாவில் மொத்தம் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை வருகிற மே மாதம் 13 ம் தேதி நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்