முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருகலைப்புக்கு அனுமதி கிடைக்காததால் இந்திய பெண் சாவு

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

டுப்ளின்,நவ.16 - அயர்லாந்து நாட்டில் இந்திய பெண் ஒருவருக்கு கருகலைப்புக்கு அனுமதி கொடுக்காததால் ரத்தம் விஷத்தன்மையாகி இறந்துபோனார். இதனையொட்டி கருகலைப்புக்கு அனுமதிகோரி பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

இந்தியாவை சேர்ந்தவர் சவிதா ஹலப்பனவர் (31). இவர் 17 வார கற்பனியாக இருந்தார். தவறுதலாக இவர் கற்பமடைந்துவிட்டதால் கருவரை கலைக்கக்கோரி டாக்டரிடம் சென்றுள்ளார். ஆனால் கருவு உருவாகி 17 வாரங்களாகிவிட்டதால் இருதய துடிப்பு இருந்தது. இருதய துடிப்பு இருந்தால் கருவை கலைக்க அயர்லாந்தில் அனுமதி கிடையாது. அயர்லாந்து நாடானது ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளனர். அந்த நாட்டில் கருகலைப்பு தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் அரசோ அந்த நாட்டு கிறிஸ்தவ பழமைவாதிகளின் ஓட்டு கிடைக்காது என்று நினைத்து கருகலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மறுத்து வருகிறது. இதன் காரணமாக இந்திய பெண் சவிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சவிதாவுக்கு ரத்தத்தில் விஷத்தன்மை ஏற்பட்டுவிட்டதால் மேற்கு அயர்லாந்தில் உள்ள பல்கலைக்கழக கால்வே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் சவிதா இறந்துபோனார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் அயர்லாந்து பாராளுமன்றம் முன்பு மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு  ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

பெண் கற்பமடைந்த நேரத்தில் அதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தால்  கருகலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரலாம் என்று அந்த நாட்டு சுப்ரீம்கோர்ட்டு கடந்த 1992-ம் ஆண்டே அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இன்னும் திருத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இதற்கிடையில் இந்திய பெண் இறப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

சவிதா மரணத்திற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. அந்த விஷயம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறைக்கான செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்