முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகமதாபாத் டெஸ்ட்: இந்திய அணி முதல் நாள் 323 ரன்

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அகமதாபாத், நவ. 16 - இங்கிலாந்து அணிக்கு எதிராக அகம தாபாத்தில் நேற்று துவங்கிய முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்னை எடுத்து உள்ளது. 

முதல் நாள் ஆட்டத்தில் துவக்க வீரர் வீரேந்தர் சேவாக் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவருக்குப் பக்கபலமாக ஆடிய புஜாரா சதத்தை நெருங்கி உள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள சர் தார் படேல் அரங்கத்தில் நேற்று துவங் கியது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி டா சில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர் வு செய்தது. இந்திய அணி சார்பில் சே வாக் மற்றும் காம்பீர் இருவரும் ஆட்ட த்தை துவக்கினர். 

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் முதல் இன்னிங்சில் 90 ஓவரி ல் 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்னை எடுத்து இருக்கிறது. இதில் 1 வீரர் சதத் தை அடித்தார். மற்றொரு வீரர் சதத்தை நெருங்கி இருக்கிறார். 

சேவாக் சதம் அடித்தது முதல் நாள் ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 117 பந்தில் 117 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் ஸ்வான் வீசிய பந்தில் கிளீன் போல்டானார். 

அவருக்குப் பக்கபலமாக ஆடிய புஜா ரா சதத்தை நெருங்கி இருக்கிறார். அவ ர் 181 பந்தில் 98 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதி ல் 13 பவுண்டரி அடக்கம். 

மற்றொரு துவக்க வீரரான காம்பீர் 111 பந்துகளைச் சந்தித்து 45 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். டெண்டு ல்கர் 13 ரன்னிலும், கோக்லி 19 ரன்னி லும் ஆட்டம் இழந்தனர். யுவராஜ் சிங் 24 ரன்னுடன் களத்தில் இருக்கிறார். 

இங்கிலாந்து அணி சார்பில் சுழற் பந்து வீச்சாளரான ஸ்வான் சிறப்பாக பந்து வீசினார். அவர் 85 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வேகப் பந்து வீச்சாளர்களுக்கு 1 விக்கெட் கூட கிடைக்கவில்லை. 

முன்னதாக காம்பீரும், சேவாக்கும் ஆட்டத்தை துவக்கினர். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 134 -க் கு சென்ற போது, காம்பீர் ஆட்டம் இழந்தார். 

பின்பு சேவாக்குடன் புஜாரா இணைந் தார். இந்த ஜோடி நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை சிறிது சிறிதாக உயர்த்தி யது. அணியின் ஸ்கோர் 224-க்கு சென்ற போது சேவாக் ஆட்டம் இழந்தார். 

அதன் பின்பு புஜாராவுடன் டெண்டுல் கர் ஜோடி சேர்ந்தார். ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில் லை. அணியின் ஸ்கோர் 250 -ல் டெண்டுல்கரும், 283 ரன்னில் கோக்லியும் ஆட்டம் இழந்தனர். 

சேவாக் 45 பந்தில் 50 ரன் எடுத்தார். 90 பந்தில் 100 ரன் எடுத்தார். புஜாரா 67 பந்தில் 50 ரன் எடுத்தார். இந்திய அணி 11.2 ஓவரில் 50 ரன்னை எடுத்தது. 19.1 ஓவரில் 100 ரன்னை எடுத்தது. 35.3 ஓவரில் 150 ரன்னையும், 45.2 ஓவரில் 200 ரன்னையும், 56.2 ஓவரில் 250 ரன் னையும், 83.2 ஓவரில் 300 ரன்னையும், எட்டியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago