முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆதீனத்துக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

சனிக்கிழமை, 17 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, நவ. 17 - மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்கள் விற்பனையில் விதிமீறல் நடந்திருந்தால் ஆதீனம் அருணகிரிநாதரை நீக்கம் செய்து மடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆதீனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், ஆதீனத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் ஐகோர்ட் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெறுவதால் வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க கோரியிருந்தனர். இந்த மனுவுக்கு அரசு சார்பில் கடந்த 9 ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நித்யானந்தர் நியமனத்தை எதிர்த்து மட்டுமே வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க தேவையில்லை என்று கூறப்பட்டது. 

இதற்கு பதில் தெரிவிக்க மதுரை ஆதீனத்துக்கு நீதிபதி குருவையா உத்தரவிட்டார். இவ்வழக்கு கடந்த வியாழக் கிழமை விசாரணைக்கு வந்த போது ஆதீனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணை வரும் 17 ம் தேதிக்கு(இன்று) தள்ளி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்