முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பாதி பிரஜையாகவே உணர்கிறேன்: ஆங் சன் சூ

சனிக்கிழமை, 17 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.17 - நான் இந்தியாவின் பாதி பிரஜையாக இருப்பதாகவே இன்னும் உணர்கிறேன் என்று மியான்மர் நாட்டு எதிர்க்கட்சி தலைவர் ஆங் சன் சூ கிய் நேற்று உருக்கமாக கூறினார். 

இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக ஆங் சன் சூ வந்துள்ளார். சோனியா காந்தியின் அழைப்பின்பேரில் அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். புதுடெல்லியில் தாம் படித்த ஸ்ரீராம் பெண்கள் கல்லூரியில் மாணவிகளிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் நான் இன்னும் இந்தியாவின் பாதி பிரஜையாகவே உணர்கிறேன் என்றார். இந்தியா மற்றும் இந்திய மக்களிடையே தமக்கு எப்போதும் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்திய மக்களை நான் ரொம்ப நேசிக்கிறேன். இன்னும் நான் இந்தியாவின் பாதி பிரஜையாகவே இருப்பதாக கருதுகிறேன். இந்தியாவுக்கு வெளியே நான் இருப்பதாக எப்போதும் நினைத்ததில்லை. நான் எந்த இடத்தில் மகாத்மா காந்திக்கு பிடித்தமான பாடலான ரகுபதி ராகவ ராஜா ராம் என்ற பாடலை கற்றேனோ அதே இடத்திற்கு தற்போது உரையாற்ற வந்துள்ளேன் என்று ஆங் கூறியபோது அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். மியான்மரில் ஜனநாயகம் மலர வேண்டுமென்றால் இந்தியாவின் உதவி வேண்டும். ஜனநாயகத்தை மலர செய்ய நாங்கள் முயற்சி செய்து கொண்டியிருக்கிறோம். எங்கள் முயற்சியில் நீங்களும் சேர்ந்து கொண்டு உதவ வேண்டும் என்று ஆங் கேட்டுக்கொண்டார். கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நான் இந்தியாவுக்கு வந்துள்ளேன். கடந்த 1987-ம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் ஆங் மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். மியான்மர் ஜனநாயகத்தின் கதாநாயகன் என்று அழைக்கப்படும் என் தந்தை ஜெனரல் ஆங் சன், ஜவஹர்லால் நேருவின் நெருங்கிய நண்பராவார். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும், எனக்கு கொடுத்த வரவேற்பும் நான் இந்தியாவை விட்டு விலகவில்லை என்பதை உணர்கிறேன் என்றும் ஆங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்