முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதிக்கப்பட்ட நியூயார்க் நகரை பார்வையிட்டார் ஒபாமா

சனிக்கிழமை, 17 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

நியூயார்க்,நவ.17 - சாண்டி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரை அதிபர் ஒபாமா நேற்றுமுன்தினம் விமானம் மூலம் பார்வையிட்டார். அப்போது நியூயார்க் மாகாணத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படாதவாறு வீடுகள் கட்ட வேண்டும் என்று ஒபாமாவிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர். 

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியை சாண்டி புயல் கடுமையாக தாக்கியது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பலியானவர்களில் நியூயார்க், நியூஜெர்சியில் அதிகம். சாண்டி புயல் தாக்கி 2 வாரமாகியும் இன்னும் ஒரு சில பகுதிகளில் மக்கள் இருட்டில்தான் வசிக்கிறார்கள். மின்சார சப்ளை இன்னும் கிடைக்கவில்லை. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். வர்த்தக நகரமான நியூயார்க் நகரில் சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் நிவாரண பணிகளையும் விமானம் மூலம் ஒபாமா நேற்றுமுன்தினம் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஒபாமா, சாண்டி புயலால் ஏற்பட்ட பாதிப்பு இரண்டு வாரகாலமாகியும் இன்னும் ஆயிரக்கணக்கானோர், அவசர உதவி தேவையாக உள்ளனர். அவர்களுக்கு மின்சாரம், உணவு, இருப்பிடம் அவசர தேவையாக இருக்கிறது என்றார். புயல் அடிக்கடி தாக்கும் பகுதிகளில் நிரந்தரமாக இருக்கும் வகையில் வீடுகள் கட்டப்பட வேண்டும் என்றும் ஒபாமா கூறினார். விமானத்தில் இருந்து கீழே இறங்கி ஒரு வீதிக்கும் சென்று பார்வையிட்டார். அப்போது வீடுகளின் முன்பகுதியை இழந்து வெளியே நின்றவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இரண்டு குழந்தைகளை இழந்த பெற்றோர்களையும் பார்த்து ஒபாமா ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்