முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது திறமையில் இன்னும் நம்பிக்கை உள்ளது: சேவாக்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அகமதாபாத், நவ. 17 - வீரேந்திர சேவாக் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சதமடித்தார். தனது திறமையில் இன்னும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் நேற்று அகமதாபாத்தில் துவங்கியது. முதலில் இந்திய அணி மட்டை ஏந்தினர். நேற்று ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்தனர். தொடக்க வீரர்களில் ஒருவரான சேவாக், 117 பந்துகளில் அதே அளவு ரன் எடுத்தார். இதில் ஒரு சிக்சரும், 15 பவுண்டரிகளும் அடங்கும். கடைசியாக இதே மைதானத்தில் 2010 ம் ஆண்டில் சேவாக் நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன்களை எடுத்திருந்தார். ஆனால் இதுவரை அவர் சதம் எடுக்கவில்லை. 

சமீப காலமாக அவரது ஆட்டமும் எடுபடவில்லை. இதனால் அவரை பற்றி விமர்சனங்கள் எழுந்தன. கேப்டன் தோனியோடு கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று அதிரடியாக ஆடி சேவாக் சதமடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த அதிகபட்ச ரன் இதுதான். 2002 ல் 106 ரன்களை எடுத்திருந்தார். இந்தியாவில் அடித்த 13 வது சதம் இது. இது குறித்து அவர் கூறுகையில், 

என்னுடைய ஆட்ட திறன் குறித்து நான் ஒரு போதும் சந்தேகம் கொண்டதில்லை. சிறப்பாக ஆடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் பத்திரிகைகள் தான் என்னை தவறாக விமர்சித்தன என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago