முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியப் பெண் மரணம்: அயர்லாந்து பிரதமர் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

டப்ளின், நவ. 18 - கருக்கலைப்பு சட்டம் குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி கூறியுள்ளார். ஐரீஸ் நாட்டு மக்களிடையே பன்னெடுங்காலமாக உள்ள நம்பிக்கையில் திடீர் முடிவுகள் எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்தவர் சவீதா, 31. இவரது கணவர் பிரவீன், அயர்லாந்து நாட்டின் கால்வே நகரில் இன்ஜினியராக உள்ளார்.பல் மருத்துவரான சவீதாவுக்கு, கடந்த மாதம் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், உங்கள் வயிற்றில் வளரும் கரு, இயல்பான நிலையில் இல்லை. இதனால், வலி ஏற்பட்டுள்ளதுா என்றனர்.இதைக் கேட்ட சவீதா, 17 வார கருவில் கோளாறு இருந்தால் கலைத்து விடுங்கள் என்றார். ஆனால், இது கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு; கருவை கலைக்க முடியாதுா என, டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

ஒரு கட்டத்தில், சவீதா வயிற்றில் வளர்ந்த சிசு இறந்து விட்டது. தொப்புள் கொடி வழியாக, சவீதாவின் ரத்தத்தில் விஷம் பரவியது. இதனால், இரண்டு வாரங்களுக்கு முன், சவீதா இறந்துவிட்டார்.ாகரு கலைப்பு செய்திருந்தால், சவீதா உயிர் பிழைத்திருப்பார். அவரது மரணத்துக்கு டாக்டர்கள் தான் காரணம்ா என, சவீதா பெற்றோர், வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது இந்த பிரச்னை பூதாகரமானதையடுத்து, அந்நாட்டு பார்லிமென்டிலும் விவாதிக்கப்பட்டது.

இதனிடையே கருக்கலைப்பு மறுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருக்கலைப்பு விதிகளை சற்று தளர்த்தக் கோரியும் 2 ஆயிரம் பேர் தலைநகர் டப்ளினில் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினர். இதேபோல், ச?விதாவின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் அயர்லாந்து நாட்டு தூதரகம் எதிரே நேற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், சவிதாவின் மரணம் குறித்து விசாரணைக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை ஜேம்ஸ் ரெய்லி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி ரேடியோவில் பேசுகையில், கருக்கலைப்பு செய்ய முடியாமல் போனதால் ரத்தம் விஷமாக இந்தியப் பெண் மரணமடைந்துள்ளது. இது துரதிஷ்டவசமானது. கருக்கலைப்பு சட்டத்தில் தீடீர் என்று எந்த முடியும் எடுக்க முடியாது. இது இந்த நாட்டு மக்களின் பன்னெடுங்கால நம்பிக்கை என்றார். மேலும் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்