இலங்கை அதிபருக்கு மூளை புற்று நோய்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      உலகம்
mahinda

கொழும்பு,பிப்.19 இலங்கை அதிபருக்கு மூளை புற்று நோய். இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கடந்த மாதம் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் இலங்கையை சேர்ந்த பிரபல புற்றுநோய் நிபுணரும் சென்றார். அங்கு அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றதாக செய்திகள் வெளியாகின. 

அந்த செய்தியை இலங்கை அரசு மறுத்து வருகிறது. ஆனால் அதிபர் ராஜபக்சே மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நார்வே நாட்டின் வெளி விவகார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே மேல் சிகிச்சை பெற அவர் விரைவில் மீண்டும் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: