முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜூன்சிங் மகனுக்கு ம.பி. காங்.சட்டசபை தலைவர் பதவி

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.14 - மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜூன்சிங் மகன் அஜய் சிங், மத்தியப்பிரதேச சட்டசபை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன்சிங், காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவராக விளங்கினார். மத்தியப்பிரதேச மாநில முதல்வராக இரண்டு முறை பதவி வகித்தவர். மத்திய அமைச்சராகவும் பல ஆண்டுகள் இருந்தவர். ராஜீவ் காந்திக்கு பிறகு பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. இந்தநிலையில் அவர் கடந்த மாதம் இறந்துவிட்டார். அவருக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் மத்தியப்பிரதேச மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவராக அவரது மகன் அஜய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி கடந்த 6 மாத காலமாக காலியாக இருந்தது. இந்த பதவியில் ஜமுனா தேவி இருந்தார். அவர் இறந்துவிட்டதால் அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இப்போது அந்த பதவிக்கு அஜய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேச சட்டசபை காங்கிரஸ் தலைவராக இருந்த ஜமுனா தேவி இறந்து பின்னர் தலைவராக ராகேஷ் செளத்ரி தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியை நிரந்தரமாக வைத்துக்கொள்ள செளத்ரி முயற்சி செய்தார். ஆனால் அஜய் சிங் கடும் முயற்சி செய்ததால் அவருக்கே இந்த பதவி கொடுக்கப்பட்டுவிட்டது. சித்தி சட்டமன்ற தொகுதியில் 5 தடவை எம்.எல்.ஏ.வாக அஜய் சிங் இருக்கிறார். அதேமாதிரி செளத்ரியும் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சுரேஷ் பச்சோரி நீக்கப்பட்டு மத்திய அமைச்சர் காந்திலால் புருரீயா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் செய்யப்பட்ட ஓரிரு நாளில் அஜய்சிங் சட்டசபை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago