முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டுப்போடாமல் திரும்பிய மலையாள நடிகை காவ்யா

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

கொச்சி,ஏப்.14 - ஓட்டுப்போட சென்ற மலையாள நடிகை காவ்யா மாதவன், வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வாய் தகராறின் காரணமாக ஓட்டுப்போடாமலேயே திரும்பினார். நடிகை காவ்யா சிறுவயதிலேயே இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  கேரள முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீபன் நடித்த மீசை மாதவன் படத்தின் மூலம் பிரபலமானவர் காவ்யா மாதவன். இவர் மேலும் ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். இதில் மிழி ரண்டிலம்,பெருமழகள்ளம் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். தமிழ் படங்களிலும் காவ்யா நடித்துள்ளார். அதில் முக்கியமான படம் சியான் விக்ரம் நடித்த காசி படமும் ஒன்றாகும். இவர் நேற்று கொச்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட வந்தார். வந்தவர்,வரிசையில் நிற்காமல் தாம் நடிகை என்ற மம்தையில் நேரடியாக வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றார். இதற்கு ஏற்கனவே நீண்டநேரம் வரிசையில் நின்றவர்களில் ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் காவ்யாவுக்கும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த காவ்யா, ஓட்டுப்போடாமலேயே திரும்பிவிட்டார். யாராக இருந்தாலும் வரிசையில் நிற்க வேண்டும் என்பது நியதியல்லாவா? காவ்யாவுடன் அவரின் பெற்றோர்களும் வந்திருந்தனர். ஆனால் பெற்றோர்கள் ஓட்டுப்போட்டார்களா அல்லது இல்லையா என்பது குறித்து தகவல் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்